Skip to main content

பனீ இஸ்ராயீல் வசனம் ௨௯

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُوْلَةً اِلٰى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا   ( الإسراء: ٢٩ )

And (do) not make
وَلَا تَجْعَلْ
ஆக்காதே
your hand
يَدَكَ
உனது கையை
chained
مَغْلُولَةً
விலங்கிடப்பட்டதாக
to your neck
إِلَىٰ عُنُقِكَ
உன் கழுத்தில்
and not extend it
وَلَا تَبْسُطْهَا
இன்னும் விரிக்காதே/அதை
(to its) utmost reach
كُلَّ ٱلْبَسْطِ
முற்றிலும் விரித்ததாக
so that you sit
فَتَقْعُدَ
அதனால் தங்கிவிடுவாய்
blameworthy
مَلُومًا
பழிக்கப்பட்டவராக
insolvent
مَّحْسُورًا
முடக்கப்பட்டவராக

Wa laa taj'al yadaka maghloolatan il 'unuqika wa laa tabsut haa kullal basti fataq'uda maloomam mahsooraa (al-ʾIsrāʾ 17:29)

Abdul Hameed Baqavi:

(உங்களுடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உங்களுடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! அன்றி, (உங்களிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உங்களுடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்கள்! அதனால் நீங்கள் நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கி விடுவீர்கள்.

English Sahih:

And do not make your hand [as] chained to your neck or extend it completely and [thereby] become blamed and insolvent. ([17] Al-Isra : 29)

1 Jan Trust Foundation

(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்.