Zaalika jazaa'uhum biannahum kafaroo bi aayaatinaa wa qaalooo 'a izaa kunnaa 'izaamanw wa rufaatan'a innaa lamaboosoona khalqan jadeedaa (al-ʾIsrāʾ 17:98)
அவர்கள், நம்முடைய வசனங்களை நிராகரித்து விட்டதுடன் "நாம் (மரணித்து) எலும்பாகவும், உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?" என்று கூறிக் கொண்டிருந்ததும்தான் இத்தகைய (கொடிய) தண்டனையை அவர்கள் அடைவதற்குரிய காரணமாகும்.
English Sahih:
That is their recompense because they disbelieved in Our verses and said, "When we are bones and crumbled particles, will we [truly] be resurrected [in] a new creation?" ([17] Al-Isra : 98)
1 Jan Trust Foundation
அவர்கள் தம் வசனங்களை நிராகரித்து, “நாம் (மரித்து) எலும்புகளாகவும், உக்கி மண்ணோடு மண்ணாகவும் ஆகிவிடுவோமாயின், (மீண்டும்) புதியதொரு படைப்பாக எழுப்பபடுவோமா?” என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்களே அதற்காக அவர்களுடைய கூலி இது தான்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதுதான் அவர்களின் தண்டனை. காரணம், நிச்சயமாக அவர்கள் நம் வசனங்களை நிராகரித்தனர். “நாங்கள் (மரணித்து) எலும்புகளாகவும், மக்கியவர்களாக (மண்ணோடு மண்ணாக) ஆகிவிட்டால் நிச்சயமாக நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?” என்று கூறினர்.