உன்னுடைய தோட்டத்தைவிட மிக்க மேலானதை என் இறைவன் எனக்குக் கொடுக்கவும் (உன் நன்றிகெட்ட தன்மையின் காரணமாக) உன் தோப்பின் மீது யாதொரு ஆபத்தை வானத்தில் இருந்து இறக்கி (அதிலுள்ள மரம், செடிகளையெல்லாம் அழித்து) அதனை வெட்டவெளியாக (என் இறைவன்) செய்து விடவும் கூடும்.
English Sahih:
It may be that my Lord will give me [something] better than your garden and will send upon it a [disastrous] penalty from the sky, and it will become a smooth, dusty ground, ([18] Al-Kahf : 40)
1 Jan Trust Foundation
“உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உன் தோட்டத்தை விட சிறந்ததை என் இறைவன் எனக்குத் தந்து, அ(ந்)த (உன் தோட்டத்தி)ன் மீது அழிவை வானத்திலிருந்து அவன் அனுப்பக்கூடும். (அப்போது அத்தோட்டம்) வழுவழுப்பான வெறும் தரையாக ஆகிவிடும்.