நிராகரிப்பவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஓரிறை நம்பிக்கையாளர்களை நோக்கி "நம் இரு வகுப்பாரில் எவர்களுடைய வீடு (தற்சமயம்) மேலானதாகவும் அழகான தோற்றத்துடனும் இருக்கிறது?" என்று கேட்கின்றனர்.
English Sahih:
And when Our verses are recited to them as clear evidences, those who disbelieve say to those who believe, "Which of [our] two parties is best in position and best in association?" ([19] Maryam : 73)
1 Jan Trust Foundation
இன்னும் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள்முன் ஓதப்பெறும்போது முஃமின்களிடத்தில், (அவற்றை) நிராகரிக்க முயலும் காஃபிர்கள்| “நம் இரு வகுப்பாரில் இப்பொழுது யாருடைய வீடு மேலானதாகவும், யாருடை சபை மிக அழகானதாகவும் இருக்கிறது?” என்று கேட்கின்றனர்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் மீது நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு கூறுகின்றனர்: “இரு பிரிவினரில் யார் தங்குமிடத்தால் சிறந்தவர், சபையால் மிக அழகானவர்?”