அல்லாஹ்விடமிருந்து (நம்முடைய) தூதராகிய (நீங்கள்) அவர்களிடம் வந்து அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப் படுத்தியபோதிலும், (முந்திய) வேதம் வழங்கப்பட்ட அவர்களில் பலர் அல்லாஹ்வுடைய (இந்த) திருமறையையே தாங்கள் அறியாதது போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் தூக்கிப்போட்டு விடுகின்றனர்.
English Sahih:
And when a messenger from Allah came to them confirming that which was with them, a party of those who had been given the Scripture threw the Scripture of Allah [i.e., the Torah] behind their backs as if they did not know [what it contained]. ([2] Al-Baqarah : 101)
1 Jan Trust Foundation
அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் கொடுக்கப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுடைய (இந்த) வேதத்தை - அவர்கள் அறியாதது போல் - தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தார்கள்.