(நபியே!) எவர்கள் நாம் கொடுத்த ("தவ்றாத்") வேதத்தை முறைப்படி (அறிந்து) ஓதுகிறார்களோ அவர்கள், (குர்ஆனாகிய) இதனையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். (ஆகவே, அவர்களில்) எவரேனும் இதனை நிராகரித்தால் அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களே!
English Sahih:
Those to whom We have given the Book recite it with its true recital. They [are the ones who] believe in it. And whoever disbelieves in it – it is they who are the losers. ([2] Al-Baqarah : 121)
1 Jan Trust Foundation
யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்; அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்; யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை, ஓதுவதின் முறைப்படி (அறிந்து) அதை ஓதுகிறார்கள். அவர்கள் அதை நம்பிக்கை கொள்கிறார்கள். எவர்கள் அதை நிராகரிப்பார்களோ அவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள்.