Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௧௪

وَاِذَا لَقُوا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْٓا اٰمَنَّا ۚ وَاِذَا خَلَوْا اِلٰى شَيٰطِيْنِهِمْ ۙ قَالُوْٓا اِنَّا مَعَكُمْ ۙاِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ  ( البقرة: ١٤ )

And when they meet
وَإِذَا لَقُوا۟
அவர்கள் சந்தித்தால்
those who believe[d]
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களை
they say
قَالُوٓا۟
கூறுகிறார்கள்
"We believe[d]"
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
But when they are alone
وَإِذَا خَلَوْا۟
அவர்கள் தனித்தால்
with their evil ones
إِلَىٰ شَيَٰطِينِهِمْ
பக்கம்/ஷைத்தான்கள்/தங்கள்
they say
قَالُوٓا۟
கூறுகிறார்கள்
"Indeed, we
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
(are) with you
مَعَكُمْ
உங்களுடன்
only we
إِنَّمَا نَحْنُ
நாங்கள் எல்லாம்
(are) mockers"
مُسْتَهْزِءُونَ
பரிகசிப்பவர்கள்தான்

Wa izaa laqul lazeena aamanoo qaalooo aamannaa wa izaa khalw ilaa shayaateenihim qaalooo innaa ma'akum innamaa nahnu mustahzi'oon (al-Baq̈arah 2:14)

Abdul Hameed Baqavi:

தவிர அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் "நாங்களும் (உங்களைப் போல்) நம்பிக்கையாளர்கள்தான்" எனவும் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் (நம்பிக்கையாளர்களை விட்டு விலகித்) தங்களின் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டாலோ "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம். ஆனால், நாங்கள் (நம்பிக்கையாளர்களைப்) பரிகாசம் செய்(யவே அவ்விதம் அவர்களிடம் கூறு)கிறோம்" எனக் கூறுகின்றனர்.

English Sahih:

And when they meet those who believe, they say, "We believe"; but when they are alone with their evil ones, they say, "Indeed, we are with you; we were only mockers." ([2] Al-Baqarah : 14)

1 Jan Trust Foundation

இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள்.