Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௨௦

يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ اَبْصَارَهُمْ ۗ كُلَّمَآ اَضَاۤءَ لَهُمْ مَّشَوْا فِيْهِ ۙ وَاِذَآ اَظْلَمَ عَلَيْهِمْ قَامُوْا ۗوَلَوْ شَاۤءَ اللّٰهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْ ۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ࣖ  ( البقرة: ٢٠ )

Almost
يَكَادُ
நெருங்குகிறது
the lightning
ٱلْبَرْقُ
மின்னல்
snatches away
يَخْطَفُ
பறிக்கிறது
their sight
أَبْصَٰرَهُمْۖ
பார்வைகளை அவர்களின்
Whenever it flashes
كُلَّمَآ أَضَآءَ
அது வெளிச்சம் தரும் போதெல்லாம்
for them
لَهُم
அவர்களுக்கு
they walk
مَّشَوْا۟
நடக்கிறார்கள்
in it
فِيهِ
அதில்
and when it darkens
وَإِذَآ أَظْلَمَ
இன்னும் இருள் சூழ்ந்தால்
on them
عَلَيْهِمْ
அவர்கள் மீது
they stand (still)
قَامُوا۟ۚ
நிற்கிறார்கள்
And if had willed
وَلَوْ شَآءَ
நாடினால்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
He would certainly have taken away
لَذَهَبَ
திட்டமாக சென்றுவிடுவான்
their hearing
بِسَمْعِهِمْ
கேள்விப்புலனைக் கொண்டு/அவர்களின்
and their sight
وَأَبْصَٰرِهِمْۚ
பார்வைகளை அவர்களின்
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(is) on
عَلَىٰ
மீது
every thing
كُلِّ شَىْءٍ
எல்லாம்/பொருள்
All-Powerful
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Yakaadul barqu yakhtafu absaarahum kullamaaa adaaa'a lahum mashaw feehi wa izaaa azlama 'alaihim qaamoo; wa law shaaa'al laahu lazahaba bisam'ihim wa absaarihim; innal laaha 'alaa kulli shai'in Qadeer (al-Baq̈arah 2:20)

Abdul Hameed Baqavi:

(தவிர) அந்த மின்னல் இவர்களின் பார்வைகளைப் பறிக்கப் பார்க்கின்றது. அது இவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அ(ந்த வெளிச்சத்)தில் நடக்(க விரும்பு)கிறார்கள். (ஆனால், அம்மின்னல் மறைந்து) அவர்களை இருள் சூழ்ந்து கொண்டால் (வழி தெரியாது திகைத்து) நின்று விடுகிறார்கள். இன்னும் அல்லாஹ் விரும்பினால் இவர்களுடைய கேள்விப் புலனையும் பார்வைகளையும் போக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் (எவ்விதமும் செய்ய) பேராற்றலுடையவன்.

English Sahih:

The lightning almost snatches away their sight. Every time it lights [the way] for them, they walk therein; but when darkness comes over them, they stand [still]. And if Allah had willed, He could have taken away their hearing and their sight. Indeed, Allah is over all things competent. ([2] Al-Baqarah : 20)

1 Jan Trust Foundation

அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அத(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.