Allazeena yunfiqoona amwaalahum billaili wan nahaari sirranw wa 'alaaniyatan falahum ajruhum 'inda Rabbihim wa laa khawfun 'alaihim wa laa hum yahzanoon (al-Baq̈arah 2:274)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்கள் பொருளை (பிறருக்கு உதவிடும் நோக்கில்) இரவிலும், பகலிலும், இரகசிய மாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. தவிர, அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
English Sahih:
Those who spend their wealth [in Allah's way] by night and by day, secretly and publicly – they will have their reward with their Lord. And no fear will there be concerning them, nor will they grieve. ([2] Al-Baqarah : 274)
யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தங்கள் செல்வங்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தர்மம் புரிபவர்கள், அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு; அவர்கள் மீது பயமில்லை; அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்.