Skip to main content

ஸூரத்து தாஹா வசனம் ௭௭

وَلَقَدْ اَوْحَيْنَآ اِلٰى مُوْسٰٓى اَنْ اَسْرِ بِعِبَادِيْ فَاضْرِبْ لَهُمْ طَرِيْقًا فِى الْبَحْرِ يَبَسًاۙ لَّا تَخٰفُ دَرَكًا وَّلَا تَخْشٰى   ( طه: ٧٧ )

And verily
وَلَقَدْ
திட்டவட்டமாக
We inspired
أَوْحَيْنَآ
நாம் வஹீ அறிவித்தோம்
to Musa
إِلَىٰ مُوسَىٰٓ
மூஸாவிற்கு
that "Travel by night
أَنْ أَسْرِ
இரவில் அழைத்துச் செல்வீராக
with My slaves
بِعِبَادِى
என் அடியார்களை
and strike
فَٱضْرِبْ
இன்னும் ஏற்படுத்துவீராக
for them
لَهُمْ
அவர்களுக்காக
a path
طَرِيقًا
ஒரு பாதையை
in the sea
فِى ٱلْبَحْرِ
கடலில்
dry;
يَبَسًا
காய்ந்த
not fearing
لَّا تَخَٰفُ
நீர் பயப்பட மாட்டீர்
to be overtaken
دَرَكًا
பிடிக்கப்படுவதை
and not being afraid"
وَلَا تَخْشَىٰ
அஞ்சமாட்டீர்

Wa laqad awhainaaa ilaa Moosaaa an asri bi'ibaadee fadrib lahum tareeqan fil bahri yabasal laa takhaafu darakanw wa laa takhshaa (Ṭāʾ Hāʾ 20:77)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வஹீ மூலம் அறிவித்தோம். "நீங்கள் என்னுடைய அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக நடந்து (சென்று) விடுங்கள். (வழியில் குறுக்கிடும்) கடலில் (உங்களது தடியால் அடித்து) உலர்ந்த வழியை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். (உங்களை எதிரிகள்) அடைந்து விடுவார்களென்று நீங்கள் பயப்பட வேண்டாம். (அக்கடலில் உங்களுடைய மக்கள் மூழ்கி விடுவார்கள் என்றும்) நீங்கள் அஞ்சாதீர்கள்" (என்றும் அறிவித்தோம்).

English Sahih:

And We had inspired to Moses, "Travel by night with My servants and strike for them a dry path through the sea; you will not fear being overtaken [by Pharaoh] nor be afraid [of drowning]." ([20] Taha : 77)

1 Jan Trust Foundation

இன்னும்| “நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக!” என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்.