Skip to main content

ஸூரத்துந் நம்லி வசனம் ௪௯

قَالُوْا تَقَاسَمُوْا بِاللّٰهِ لَنُبَيِّتَنَّهٗ وَاَهْلَهٗ ثُمَّ لَنَقُوْلَنَّ لِوَلِيِّهٖ مَا شَهِدْنَا مَهْلِكَ اَهْلِهٖ وَاِنَّا لَصٰدِقُوْنَ   ( النمل: ٤٩ )

They said
قَالُوا۟
அவர்கள் கூறினர்
"Swear to each other
تَقَاسَمُوا۟
தங்களுக்குள் சத்தியம் செய்தனர்
by Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
surely we will attack him by night
لَنُبَيِّتَنَّهُۥ
நிச்சயமாக நாங்கள் அவரை கொன்று விடுவோம்
and his family
وَأَهْلَهُۥ
அவருடைய குடும்பத்தையும்
Then we will surely say
ثُمَّ لَنَقُولَنَّ
பிறகு கூறுவோம்
to his heir
لِوَلِيِّهِۦ
அவருடைய பொறுப்பாளருக்கு
"Not we witnessed
مَا شَهِدْنَا
நாம்ஆஜராகவில்லை
(the) destruction (of) his family
مَهْلِكَ أَهْلِهِۦ
அவ(ரும் அவ)ரது குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்கு
and indeed we (are) surely truthful'"
وَإِنَّا لَصَٰدِقُونَ
நாங்கள் உண்மையாளர்கள்

Qaaloo taqaasamoo billaahi lanubaiyitannahoo wa ahlahoo summaa lanaqoolana liwaliy yihee maa shahidnaa mahlika ahliee wa innaa lasaadiqoon (an-Naml 27:49)

Abdul Hameed Baqavi:

அவர்கள் ஸாலிஹையும் அவருடைய குடும்பத்தையும் நாம் இரவோடு இரவாக அழித்து விடுவோம். (இதனை ஒருவரிடமும் கூறுவதில்லை என்று) நாம் நமக்குள்ளாக அல்லாஹ் மீது சத்தியம் செய்துகொண்டு அவருடைய சொந்தக்காரர்களிடம், "அவர் வெட்டுப்பட்ட இடத்திற்கு நாங்கள் வரவேயில்லை. நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகிறோம்" என்று நாம் கூறிவிடலாம் என்று கூறிக்கொண்டார்கள்.

English Sahih:

They said, "Take a mutual oath by Allah that we will kill him by night, he and his family. Then we will say to his executor, 'We did not witness the destruction of his family, and indeed, we are truthful.'" ([27] An-Naml : 49)

1 Jan Trust Foundation

அவர்கள்| “நாம் அவரையும் (ஸாலிஹையும்), அவருடைய குடும்பத்தாரையும் இரவோடிரவாக திட்டமாக அழித்து விடுவோம்; (இதனை யாரிடமும் சொல்வதில்லை) என்று நாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கொள்வோமாக!” பிறகு அவருடைய வாரிஸ்தாரிடம் (அவர்கள் பழிக்குப்பழி வாங்க வந்தால்) “உங்கள் குடும்பத்தார் அழிக்கப்பட்டதை நாங்கள் காணவேயில்லை; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்” என்று திட்டமாகக் கூறிவிடலாம் (எனச் சதி செய்தார்கள்).