மூஸாவுடைய தாயின் உள்ளம் (அவரை ஆற்றில் எறிந்த பின் துக்கத்தால்) வெறுமையாகி விட்டது. அவள் என்னுடைய வார்த்தையை நம்பும்படி அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப் படுத்தியிருக்காவிடில், (மூஸா பிறந்திருக்கும் விஷயத்தை அனைவருக்கும்) அவள் வெளிப்படுத்தியே இருப்பாள்.
English Sahih:
And the heart of Moses' mother became empty [of all else]. She was about to disclose [the matter concerning] him had We not bound fast her heart that she would be of the believers. ([28] Al-Qasas : 10)
1 Jan Trust Foundation
மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது; முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால், அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முடுகியிருப்பாள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மூசாவின் தாயாருடைய உள்ளம் (மூசாவின் நினைவைத் தவிர மற்ற அனைத்திலிருந்தும்) வெறுமையாக ஆகிவிட்டது. அவள் நம்பிக்கையாளர்களில் ஆகவேண்டும் என்பதற்காக அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப்படுத்தவில்லையெனில் நிச்சயமாக அவள் அவரை (-மூஸாவை) வெளிப்படுத்தி இருக்கக்கூடும்.