Skip to main content

ஸூரத்துல் கஸஸ் வசனம் ௧௧

وَقَالَتْ لِاُخْتِهٖ قُصِّيْهِۗ فَبَصُرَتْ بِهٖ عَنْ جُنُبٍ وَّهُمْ لَا يَشْعُرُوْنَ ۙ  ( القصص: ١١ )

And she said
وَقَالَتْ
அவள் கூறினாள்
to his sister
لِأُخْتِهِۦ
அவருடைய சகோதரிக்கு
"Follow him"
قُصِّيهِۖ
நீ அவரைப் பின்தொடர்ந்து செல்
So she watched
فَبَصُرَتْ
ஆக, அவள் பார்த்துவிட்டாள்
him
بِهِۦ
அவரை
from a distance
عَن جُنُبٍ
தூரத்திலிருந்து
while they
وَهُمْ
எனினும், அவர்கள்
(did) not perceive
لَا يَشْعُرُونَ
உணரவில்லை

Wa qaalat li ukhtihee qusseehi fabasurat bihee 'an junubinw wahum laa yash'uroon (al-Q̈aṣaṣ 28:11)

Abdul Hameed Baqavi:

(அக்குழந்தையைப் பேழையில் வைத்து ஆற்றில் விட்டதன் பின்னர்) அவள், அக்குழந்தையின் சகோதரியை நோக்கி "(ஆற்றில் மிதந்து செல்லும்) அதனைப் பின்தொடர்ந்து நீயும் செல்" என்று கூறினாள். அவளும் அ(தனைப் பின்தொடர்ந்து சென்று அதனை எடுத்த)வர்களுக்குத் தெரியாத விதத்தில் அதை(ப் பற்றி என்ன நடக்கிறதென்று) தூரத்திலிருந்தே கவனித்து வந்தாள்.

English Sahih:

And she said to his sister, "Follow him"; so she watched him from a distance while they perceived not. ([28] Al-Qasas : 11)

1 Jan Trust Foundation

இன்னும் மூஸாவின் சகோதரியிடம்| “அவரை நீ பின் தொடர்ந்து செல்” என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவரை கவனித்து வந்தாள்.