Skip to main content

ஸூரத்துல் கஸஸ் வசனம் ௫௮

وَكَمْ اَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ ۢ بَطِرَتْ مَعِيْشَتَهَا ۚفَتِلْكَ مَسٰكِنُهُمْ لَمْ تُسْكَنْ مِّنْۢ بَعْدِهِمْ اِلَّا قَلِيْلًاۗ وَكُنَّا نَحْنُ الْوَارِثِيْنَ   ( القصص: ٥٨ )

And how many
وَكَمْ
எத்தனையோ
We have destroyed
أَهْلَكْنَا
நாம் அழித்தோம்
of a town
مِن قَرْيَةٍۭ
ஊர்களை
which exulted
بَطِرَتْ
வரம்பு மீறி நிராகரித்தனர்
(in) its means of livelihood
مَعِيشَتَهَاۖ
தங்களது வாழ்க்கை (வசதியால்)
And these
فَتِلْكَ
இதோ
(are) their dwellings
مَسَٰكِنُهُمْ
அவர்களது இல்லங்கள்
not have been inhabited
لَمْ تُسْكَن
வசிக்கப்படவில்லை
after them
مِّنۢ
பின்னர்
after them
بَعْدِهِمْ
பின்னர் அவர்களுக்கு
except
إِلَّا
தவிர
a little
قَلِيلًاۖ
குறைவாகவே
And indeed, [We]
وَكُنَّا
இருக்கின்றோம்
We
نَحْنُ
நாமே
(are) the inheritors
ٱلْوَٰرِثِينَ
வாரிசுகளாக

Wa kam ahlaknaa min qaryatim batirat ma'eeshatahaa fatilka masaainuhum lam tuskam mim ba'dihim illaa qaleelaa; wa kunnaa Nahnul waariseen (al-Q̈aṣaṣ 28:58)

Abdul Hameed Baqavi:

(இவர்களைப் போன்று) தன் வாழ்க்கைத் தரத்தால் கொழுத்துத் திமிர் பிடித்த எத்தனையோ ஊரார்களை நாம் அழித்திருக்கின்றோம். இதோ! (பாருங்கள்.) இவை யாவும் அவர்கள் வசித்திருந்த இடங்கள்தாம். (எனினும், அங்கே மூலை முடுக்குகளில் உள்ள) சொற்ப சிலரைத் தவிர நாம்தான் அதற்கு வாரிசுகளாக இருக்கிறோம்.

English Sahih:

And how many a city have We destroyed that was insolent in its [way of] living, and those are their dwellings which have not been inhabited after them except briefly. And it is We who were the inheritors. ([28] Al-Qasas : 58)

1 Jan Trust Foundation

தங்களுடைய வாழ்க்கை வசதிகளின் செருக்கினால் (அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம்; இவை யாவும் அவர்கள் வாழ்ந்த இடங்களேயாகும்; அவர்களுக்குப் பின் சொற்பமான நேரம் தவிர அங்கு எவரும் வசிக்க வில்லை; மேலும் நாமே (அவற்றிற்கு) வாரிசுகளாகினோம்.