Skip to main content

ஸூரத்துல் கஸஸ் வசனம் ௮௨

وَاَصْبَحَ الَّذِيْنَ تَمَنَّوْا مَكَانَهٗ بِالْاَمْسِ يَقُوْلُوْنَ وَيْكَاَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُۚ لَوْلَآ اَنْ مَّنَّ اللّٰهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا ۗوَيْكَاَنَّهٗ لَا يُفْلِحُ الْكٰفِرُوْنَ ࣖ   ( القصص: ٨٢ )

And began
وَأَصْبَحَ
காலையில்
those who (had) wished
ٱلَّذِينَ تَمَنَّوْا۟
ஆசைப்பட்டவர்கள்
his position
مَكَانَهُۥ
அவனுடைய இடத்தை
the day before
بِٱلْأَمْسِ
நேற்று
(to) say
يَقُولُونَ
கூறினர்
"Ah! That
وَيْكَأَنَّ
பார்க்கவில்லையா!/நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
extends
يَبْسُطُ
விசாலமாக்குகின்றான்
the provision
ٱلرِّزْقَ
வாழ்வாதாரத்தை
for whom He wills
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
of His slaves
مِنْ عِبَادِهِۦ
தனது அடியார்களில்
and restricts it
وَيَقْدِرُۖ
இன்னும் சுருக்கிவிடுகிறான்
If not that Allah had favored
لَوْلَآ أَن مَّنَّ
அருள் புரிந்திருக்கவில்லையென்றால்
Allah had favored
ٱللَّهُ
அல்லாஹ்
[to] us
عَلَيْنَا
நம்மீது
He would have caused it to swallow us
لَخَسَفَ
அவன் சொருகியிருப்பான்
He would have caused it to swallow us
بِنَاۖ
நம்மையும்
Ah! That
وَيْكَأَنَّهُۥ
பார்க்கவில்லையா!/நிச்சயமாக
not will succeed
لَا يُفْلِحُ
வெற்றி பெறமாட்டார்கள்
the disbelievers"
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்

Wa asbahal lazeena tamannaw makaanahoo bil amsi yaqooloona waika annal laaha yabsutur rizqa limany ya shaaa'u min 'ibaadihee wa yaqdiru law laaa am mannal laahu 'alainaa lakhasafa binaa waika annahoo laa yuflihul kaafiroon (al-Q̈aṣaṣ 28:82)

Abdul Hameed Baqavi:

நேற்றைய தினம் அவனுடைய பதவியை விரும்பியவர் களெல்லாம் (அவனும், அவனுடைய மாளிகையும் பூமியில் சொருகிப்போனதைக் கண்ணுற்றதும் திடுக்கிட்டு நாணமுற்று) என்ன நேர்ந்தது! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கின்றான்; (அவன் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் விடுகின்றான் என்றும், (மனிதனுடைய சாமர்த்தியத்தால் மட்டும் ஒன்றும் ஆவதில்லை என்றும்) தெரிகின்றதே! அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்கா விடில் அவ்வாறே நம்மையும் பூமி விழுங்கியே இருக்கும், (என்று கூறினர். பிறகு திடுக்கிட்டு, நாணமுற்று) என்ன நேர்ந்தது! நிச்சயமாக (இறைவனின் அருட்கொடையை மறுக்கும்) நன்றி கெட்டவர்கள் வெற்றி அடையவே மாட்டார்கள் என்று (தெரிகின்றதே! என்று) கூற ஆரம்பித்தார்கள்.

English Sahih:

And those who had wished for his position the previous day began to say, "Oh, how Allah extends provision to whom He wills of His servants and restricts it! If not that Allah had conferred favor on us, He would have caused it to swallow us. Oh, how the disbelievers do not succeed!" ([28] Al-Qasas : 82)

1 Jan Trust Foundation

முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.