நூஹ் நபியை நம்முடைய தூதராக அவருடைய மக்களிடம் நாம் அனுப்பி வைத்தோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் வருடங்கள் அவர்களிடையே இருந்தார். (இவ்வளவு காலமிருந்தும் அவரை அவருடைய மக்களில் சிலரைத் தவிர பெரும் பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்ததனால் வெள்ளப்பிரளயம் அவர்களைப் பிடித்துக்கொண்டது.
English Sahih:
And We certainly sent Noah to his people, and he remained among them a thousand years minus fifty years, and the flood seized them while they were wrongdoers. ([29] Al-'Ankabut : 14)
1 Jan Trust Foundation
மேலும்| திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக நாம் நூஹை அவரது மக்களிடம் அனுப்பினோம். அவர் அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகள் (அவற்றில்) ஐம்பது ஆண்டுகள் தவிர தங்கி இருந்தார். இறுதியில் அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்க அவர்களை வெள்ளப்பிரளயம் பிடித்தது.