Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௮௫

كُلُّ نَفْسٍ ذَاۤىِٕقَةُ الْمَوْتِۗ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ ۗ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَآ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ   ( آل عمران: ١٨٥ )

Every
كُلُّ
ஒவ்வொரு
soul
نَفْسٍ
ஆன்மா
(will) taste
ذَآئِقَةُ
சுவைக்கக் கூடியது
[the] death
ٱلْمَوْتِۗ
மரணத்தை
and only
وَإِنَّمَا
எல்லாம்
you will be paid in full
تُوَفَّوْنَ
முழுமையாக நிறைவேற்றப்படுவீர்கள்
your reward
أُجُورَكُمْ
உங்கள் கூலிகளை
(on the) Day (of) [the] Resurrection
يَوْمَ ٱلْقِيَٰمَةِۖ
மறுமை நாளில்
Then whoever
فَمَن
ஆகவே, எவர்
is drawn away
زُحْزِحَ
தூரமாக்கப்பட்டார்
from the Fire
عَنِ ٱلنَّارِ
நெருப்பி லிருந்து
and admitted
وَأُدْخِلَ
இன்னும் நுழைக்கப்பட்டார்
(to) Paradise
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
then surely he is successful
فَقَدْ فَازَۗ
திட்டமாக வெற்றிபெற்றார்
And not
وَمَا
இன்னும் இல்லை
(is) the life
ٱلْحَيَوٰةُ
வாழ்க்கை
(of) the world
ٱلدُّنْيَآ
இவ்வுலகம்
except enjoyment
إِلَّا مَتَٰعُ
தவிர/இன்பம்
(of) delusion
ٱلْغُرُورِ
மயக்கக் கூடியது

Kulu nafsin zaaa'iqatul mawt; wa innamaa tuwaffawna ujoorakum Yawmal Qiyaamati faman zuhziha 'anin Naari waudkhilal Jannata faqad faaz; wa mal hayaatud dunyaaa illaa mataa'ul ghuroor (ʾĀl ʿImrān 3:185)

Abdul Hameed Baqavi:

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை.

English Sahih:

Every soul will taste death, and you will only be given your [full] compensation on the Day of Resurrection. So he who is drawn away from the Fire and admitted to Paradise has attained [his desire]. And what is the life of this world except the enjoyment of delusion. ([3] Ali 'Imran : 185)

1 Jan Trust Foundation

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.