Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௨௩

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يُدْعَوْنَ اِلٰى كِتٰبِ اللّٰهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ وَهُمْ مُّعْرِضُوْنَ  ( آل عمران: ٢٣ )

Have not you seen
أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
[to] those who were given
إِلَى ٱلَّذِينَ أُوتُوا۟
கொடுக்கப் பட்டவர்களை
a portion
نَصِيبًا
ஒரு பகுதி
of the Scripture?
مِّنَ ٱلْكِتَٰبِ
வேதத்தில்
They are invited
يُدْعَوْنَ
அழைக்கப் படுகிறார்கள்
to
إِلَىٰ
பக்கம்
(the) Book
كِتَٰبِ
வேதம்
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
that (it should) arbitrate
لِيَحْكُمَ
அது தீர்ப்பளிப்பதற்கு
between them
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
then
ثُمَّ
பிறகு
turns away
يَتَوَلَّىٰ
விலகிவிடுகிறார்(கள்)
a party
فَرِيقٌ
ஒரு பிரிவினர்
of them
مِّنْهُمْ
அவர்களில்
and they (are)
وَهُم
இன்னும் அவர்கள்
those who are averse
مُّعْرِضُونَ
புறக்கணிப்பவர்கள்

Alam tara ilal lazeena ootoo naseebam minal Kitaabi yud'awna ilaa Kitaabil laahi liyahkuma bainahum summa yatawallaa fareequm minhum wa hum mu'ridoon (ʾĀl ʿImrān 3:23)

Abdul Hameed Baqavi:

(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தைத் தீர்த்துவைக்க அவர்களிடமுள்ள) அல்லாஹ்வின் வேதத்தின் மூலமே தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் இதனைப் புறக்கணித்து விலகிக் கொண்டார்கள்.

English Sahih:

Do you not consider, [O Muhammad], those who were given a portion of the Scripture? They are invited to the Scripture of Allah that it should arbitrate between them; then a party of them turns away, and they are refusing. ([3] Ali 'Imran : 23)

1 Jan Trust Foundation

வேதத்திலும் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவார் (இதைப்) புறக்கணித்து விலகிக் கொண்டனர்.