مَا كَانَ لِبَشَرٍ اَنْ يُّؤْتِيَهُ اللّٰهُ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُوْلَ لِلنَّاسِ كُوْنُوْا عِبَادًا لِّيْ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ كُوْنُوْا رَبَّانِيّٖنَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُوْنَ الْكِتٰبَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُوْنَ ۙ ( آل عمران: ٧٩ )
Maa kaana libasharin ai yu'tiyahul laahul Kitaaba walhukma wan Nubuwwata summa yaqoola linnaasi koonoo 'ibaadal lee min doonil laahi wa laakin koonoo rabbaaniy yeena bimaa kuntum tu'allimoonal Kitaaba wa bimaa kuntum tadrusoon (ʾĀl ʿImrān 3:79)
Abdul Hameed Baqavi:
ஒரு மனிதருக்கு, வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் கொடுத்த பின்னர் அவர் மனிதர்களை நோக்கி "அல்லாஹ்வை அன்றி என்னை வணங்குங்கள்" என்று கூறுவதற்கு இல்லை. ஆயினும் (மனிதர்களை நோக்கி) "நீங்கள் வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஓதிக்கொண்டும் இருப்பதன் காரணமாக, (அதில் உள்ளவாறு) இறைவன் ஒருவனையே வணங்கும் மனிதர்களாக ஆகிவிடுங்கள்" என்றுதான் கூறுவார்.
English Sahih:
It is not for a human [prophet] that Allah should give him the Scripture and authority and prophethood and then he would say to the people, "Be servants to me rather than Allah," but [instead, he would say], "Be pious scholars of the Lord because of what you have taught of the Scripture and because of what you have studied." ([3] Ali 'Imran : 79)
1 Jan Trust Foundation
ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் “அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்” என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது; ஆனால் அவர் (பிற மனிதரிடம்) “நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்” (என்று தான் சொல்லுவார்).