உங்களில் (யுத்தத்திற்குச் செல்பவர்களைத்) தடை செய்பவர்களையும், தங்கள் சகோதரர்களை நோக்கி நீங்கள் "(யுத்தத்திற்குச் செல்லாது) நம்மிடம் வந்துவிடுங்கள்" என்று கூறுபவர்களையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். (அவர்களில்) சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) யுத்தத்திற்கு வருவதில்லை.
English Sahih:
Already Allah knows the hinderers among you and those [hypocrites] who say to their brothers, "Come to us," and do not go to battle, except for a few, ([33] Al-Ahzab : 18)
1 Jan Trust Foundation
உங்களில் (போருக்குச் செல்வோரைத்) தடை செய்வோரையும் தம் சகோதரர்களை நோக்கி, “நம்மிடம் வந்து விடுங்கள்” என்று கூறுபவர்களையும் அல்லாஹ் திட்டமாக அறிந்து இருக்கிறான். அன்றியும் அவர்கள் சொற்பமாகவே போர் புரிய வருகிறார்கள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களில் (நபியை விட்டு மக்களை) தடுப்பவர்களையும் தங்கள் சகோதரர்களுக்கு, எங்களிடம் வந்துவிடுங்கள் என்று சொல்பவர்களையும் அல்லாஹ் நன்கறிவான். அவர்கள் மிகக் குறைவாகவே தவிர (பெரும்பாலும்) போருக்கு வரமாட்டார்கள்.