Skip to main content

ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௨௫

وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ ۚجَاۤءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتٰبِ الْمُنِيْرِ   ( فاطر: ٢٥ )

And if they deny you
وَإِن يُكَذِّبُوكَ
இவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
then certainly
فَقَدْ
திட்டமாக
denied
كَذَّبَ
பொய்ப்பித்துள்ளனர்
those who (were) before them (were) before them
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னுள்ளவர்களும்
Came to them
جَآءَتْهُمْ
அவர்கள் கொண்டுவந்தனர்
their Messengers
رُسُلُهُم
அவர்களுடைய தூதர்கள்
with clear signs
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளையும்
and with Scriptures
وَبِٱلزُّبُرِ
வேதங்களையும்
and with the Book
وَبِٱلْكِتَٰبِ
வேதங்களையும்
[the] enlightening
ٱلْمُنِيرِ
பிரகாசமான

Wa inyukazzibooka faqad kazzabal lazeena min qablihim jaaa'at hum Rusuluhum bilbaiyinaati wa biz Zuburi wa bil Kitaabil Muneer (Fāṭir 35:25)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்கள் உங்களைப் பொய்யாக்கினால் (அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் அவர்களிடம் வந்த நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள். அவர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் "ஸுஹுஃபு"களையும், பிரகாசமான வேதங்களையும் அவர்களிடம் கொண்டு வந்திருந்தனர்.

English Sahih:

And if they deny you – then already have those before them denied. Their messengers came to them with clear proofs and written ordinances and with the enlightening Scripture. ([35] Fatir : 25)

1 Jan Trust Foundation

இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்.