Skip to main content

ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௪௦

قُلْ اَرَاَيْتُمْ شُرَكَاۤءَكُمُ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۗاَرُوْنِيْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِۚ اَمْ اٰتَيْنٰهُمْ كِتٰبًا فَهُمْ عَلٰى بَيِّنَتٍ مِّنْهُۚ بَلْ اِنْ يَّعِدُ الظّٰلِمُوْنَ بَعْضُهُمْ بَعْضًا اِلَّا غُرُوْرًا   ( فاطر: ٤٠ )

Say
قُلْ
கூறுவீராக!
"Have you seen
أَرَءَيْتُمْ
நீங்கள் அறிவியுங்கள்
your partners
شُرَكَآءَكُمُ
இணை தெய்வங்களை உங்கள்
those whom
ٱلَّذِينَ
எவர்கள்
you call
تَدْعُونَ
நீங்கள் அழைக்கின்றீர்கள்
besides besides Allah?"
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
Show Me
أَرُونِى
எனக்கு காண்பியுங்கள்
what
مَاذَا
எதை
they have created
خَلَقُوا۟
படைத்தார்கள்
from the earth
مِنَ ٱلْأَرْضِ
பூமியில்
or
أَمْ
அல்லது
for them
لَهُمْ
அவர்களுக்கு
(is) a share
شِرْكٌ
பங்கு
in the heavens
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
Or
أَمْ
அல்லது
have We given them
ءَاتَيْنَٰهُمْ
அவர்களுக்கு நாம் கொடுத்தோம்
a Book
كِتَٰبًا
ஒரு வேதத்தை
so they
فَهُمْ
ஆகவே, அவர்கள்
(are) on a clear proof
عَلَىٰ بَيِّنَتٍ
தெளிவான சான்றின் மீது
therefrom?
مِّنْهُۚ
அது விஷயத்தில்
Nay
بَلْ
மாறாக
not promise
إِن يَعِدُ
வாக்களிப்பதில்லை
the wrongdoers
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
some of them
بَعْضُهُم
அவர்களில் சிலர்
(to) others
بَعْضًا
சிலருக்கு
except delusion
إِلَّا غُرُورًا
ஏமாற்றத்தைத் தவிர

Qul ara'aytum shurakaaa'a kumul lazeena tad'oona min doonil laah; aroonee maazaa khalaqoo minal ardi am lahum shirkun fis samaawaati am aatainaahum Kitaaban fahum 'alaa baiyinatim minh; bal iny ya'iiduz zaalimoona ba 'duhum ba'dan illaa ghurooraa (Fāṭir 35:40)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) அழைப்பவைகளைப் பற்றி நீங்கள் கவனித் தீர்களா? அவை பூமியில் எதனையும் படைத்திருக்கின்றனவா? அதனை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களைப் படைப்பதில் அவைகளுக்குப் பங்குண்டா? அல்லது (அவைகளைத் தெய்வங்களெனக் கூறுவதற்குத்) தெளிவான ஆதாரமாக இருக்கக்கூடிய யாதொரு வேதத்தையும் நாம் அவைகளுக்குக் கொடுத்திருக்கின்றோமா? (இவை ஒன்றுமே) இல்லை. (இந்தத் தெய்வங்கள் பாதுகாத்துக் கொள்ளுமென்று) இந்த அநியாயக் காரர்கள் சிலர் சிலருக்குச் செய்யும் வாக்குறுதியெல்லாம் வெறும் ஏமாற்றுதலே அன்றி வேறில்லை.

English Sahih:

Say, "Have you considered your 'partners' whom you invoke besides Allah? Show me what they have created from the earth, or have they partnership [with Him] in the heavens? Or have We given them a book so they are [standing] on evidence therefrom? [No], rather, the wrongdoers do not promise each other except delusion." ([35] Fatir : 40)

1 Jan Trust Foundation

“அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? “அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?” என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை” (என்று நபியே! நீர் கூறும்).