(மறுமை நாளில்) "இவர்களின் (தலைக்கு) மேலும் நெருப்பு சூழ்ந்து கொள்ளும். இவர்களின் (பாதங்களின் கீழும் (நெருப்பு) சூழ்ந்து கொள்ளும்" இதைப் பற்றியே, அல்லாஹ் தன் அடியார் களை நோக்கி, "என் அடியார்களே! எனக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறி பயமுறுத்துகின்றான்.
English Sahih:
They will have canopies [i.e., layers] of fire above them and below them, canopies. By that Allah threatens [i.e., warns] His servants. O My servants, then fear Me. ([39] Az-Zumar : 16)
1 Jan Trust Foundation
(மறுமை நாளில்) இவர்களுக்கு மேலே நெருப்பிலான தட்டுகளும், இவர்களின் கீழும் (நெருப்பிலான) தட்டுகளும் இருக்கும்; இவ்வாறு அதைக்கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை அச்சமூட்டுகிறான்; “என் அடியார்களே! என்னிடம் நீங்கள் பயபக்தியுடன் இருங்கள்.”
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு அவர்களின் மேலிருந்தும் நரகத்தின் நிழல்களும் அவர்களுக்கு கீழிலிருந்தும் (நரகத்தின்) நிழல்களும் உண்டு. இது - இதன் மூலம் அல்லாஹ் தனது அடியார்களை பயமுறுத்துகிறான். என் அடியார்களே! என்னை பயந்துகொள்ளுங்கள்! (நிழல்களைப் போன்ற வடிவில் நரக நெருப்பு அவர்களை அடர்த்தியாக சூழ்ந்துவிடும்.)