Wa izaa zukiral laahu wahdahush ma azzat quloobul lazeena laa yu'minoona bil Aakhirati wa izaa zukiral lazeena min dooniheee izaa hum yastabshiroon (az-Zumar 39:45)
அல்லாஹ்வின் பெயரை மட்டும் தனியாகக் கூறப்பட்டால், மறுமையை நம்பாத அவர்களின் உள்ளங்கள் (கோபத்தால்) சுருங்கி விடுகின்றன. அவன் அல்லாதவை(களின் பெயர்)கள் கூறப் பட்டாலோ, சந்தோஷப்பட்டு (அவர்களுடைய உள்ளங்கள் விரிந்து மலர்ந்து) விடுகின்றன.
English Sahih:
And when Allah is mentioned alone, the hearts of those who do not believe in the Hereafter shrink with aversion, but when those [worshipped] other than Him are mentioned, immediately they rejoice. ([39] Az-Zumar : 45)
1 Jan Trust Foundation
மேலும், அல்லாஹ்(வின் பெயர்) மட்டும் தனித்தவனாகக் கூறப்பட்டால் மறுமையை ஈமான் கொள்ளாதவர்களின் இருதயங்கள் சுருங்கி விடுகின்றன; மேலும் அவனை அன்றி மற்றவர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால், உடனே அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார்கள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் ஒருவனை மட்டும் நினைவு கூரப்பட்டால் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன (வெறுக்கின்றன). அவனை அன்றி மற்றவர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டால் அப்போது அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.