(நபியே! பிரார்த்தனை செய்து) நீங்கள் கூறுங்கள்: "எங்கள் இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனே! உன் அடியார்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் அவர்களுக் கிடையில் நீ தீர்ப்பளிப்பாயாக!"
English Sahih:
Say, "O Allah, Creator of the heavens and the earth, Knower of the unseen and the witnessed, You will judge between your servants concerning that over which they used to differ." ([39] Az-Zumar : 46)
1 Jan Trust Foundation
“அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிபவனே! உன் அடியார்கள் வேறுபட்டு(த் தமக்கிடையே தர்க்கித்து)க் கொண்டிருக்கும் விஷயத்தில் நீதான் தீர்ப்புச் செய்வாய்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவனே! நீதான் உனது அடியார்களுக்கு மத்தியில் அவர்கள் தர்க்கித்து வந்த விஷயங்களில் தீர்ப்பளிப்பாய்.