(நபியே!) உங்களுக்கும், உங்களுக்கு முன்னிருந்த ஒவ்வொரு (தூது)வருக்கும் மெய்யாகவே வஹீ மூலம் அறிவிக்கப் பட்டது. (என்னவென்றால், இறைவனுக்கு) நீங்கள் இணைவைத்தால், உங்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து, நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்கள் (என்பதாகும்).
English Sahih:
And it was already revealed to you and to those before you that if you should associate [anything] with Allah, your work would surely become worthless, and you would surely be among the losers. ([39] Az-Zumar : 65)
1 Jan Trust Foundation
அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், “நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்” (என்பதுவேயாகும்).
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக உமக்கும் உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் வஹ்யி அறிவிக்கப்பட்டது: “நீர் இணைவைத்தால் உமது அமல்கள் நாசமாகிவிடும். இன்னும் நீர் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீர்.”