Skip to main content

ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௭௧

وَسِيْقَ الَّذِيْنَ كَفَرُوْٓا اِلٰى جَهَنَّمَ زُمَرًا ۗحَتّٰىٓ اِذَا جَاۤءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَآ اَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَتْلُوْنَ عَلَيْكُمْ اٰيٰتِ رَبِّكُمْ وَيُنْذِرُوْنَكُمْ لِقَاۤءَ يَوْمِكُمْ هٰذَا ۗقَالُوْا بَلٰى وَلٰكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكٰفِرِيْنَ  ( الزمر: ٧١ )

And (will) be driven
وَسِيقَ
ஓட்டிக் கொண்டு வரப்படுவார்கள்
those who disbelieve
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரித்தவர்கள்
to Hell
إِلَىٰ جَهَنَّمَ
நரகத்தின் பக்கம்
(in) groups
زُمَرًاۖ
கூட்டம் கூட்டமாக
until
حَتَّىٰٓ
இறுதியாக
when they reach it
إِذَا جَآءُوهَا
அதற்கு அவர்கள் வந்தவுடன்
(will) be opened
فُتِحَتْ
திறக்கப்படும்
its gates
أَبْوَٰبُهَا
அதன் வாசல்கள்
and (will) say
وَقَالَ
இன்னும் கூறுவார்கள்
to them
لَهُمْ
அவர்களுக்கு
its keepers
خَزَنَتُهَآ
அதன் காவலாளிகள்
"Did not come to you
أَلَمْ يَأْتِكُمْ
உங்களுக்கு வரவில்லையா?
Messengers
رُسُلٌ
தூதர்கள்
from you
مِّنكُمْ
உங்களில் இருந்தே
reciting
يَتْلُونَ
ஓதிக் காட்டினார்களே
to you
عَلَيْكُمْ
உங்களுக்கு
(the) Verses
ءَايَٰتِ
வசனங்களை
(of) your Lord
رَبِّكُمْ
உங்கள் இறைவனின்
and warning you
وَيُنذِرُونَكُمْ
இன்னும் உங்களை எச்சரித்தார்களே
(of the) meeting (of) your Day this?"
لِقَآءَ يَوْمِكُمْ هَٰذَاۚ
நீங்கள் சந்திக்கவேண்டிய இந்த நாளைப் பற்றி
They (will) say
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
"Nay!"
بَلَىٰ
ஏன் வரவில்லை
But
وَلَٰكِنْ
எனினும்
has been justified
حَقَّتْ
உறுதியாகி விட்டது
(the) word
كَلِمَةُ
வாக்கு
(of) punishment
ٱلْعَذَابِ
வேதனையின்
against the disbelievers
عَلَى ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்கள் மீது

Wa seeqal lazeena kafaroon ilaa jahannama zumaran battaaa izaa jaaa'oohaa futihat abwaabuhaa wa qaala lahum khazanatuhaaa alam yaatikum Rusulum minkum yatloona 'alaikum Aayaati Rabbikum wa yunziroonakum liqaaa'a Yawmikum haazaa; qaaloo balaa wa laakin haqqat kalimatul 'azaabi 'alal kaafireen (az-Zumar 39:71)

Abdul Hameed Baqavi:

(அந்நாளில்) நிராகரித்தவர்கள் அனைவரும், கூட்டம் கூட்டமாக நரகத்தின் பக்கம் ஓட்டி வரப்படுவார்கள். (அதன் சமீபமாக) அவர்கள் வந்தவுடன், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு விடும். அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, "உங்களில் இருந்து அல்லாஹ்வுடைய தூதர் உங்களிடம் வரவில்லையா? உங்கள் இறைவனுடைய வசனங்களை அவர் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கவில்லையா? இந்நாளை நீங்கள் சந்திக்க வேண்டியதைப் பற்றி, அவர் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கவர்கள் "ஆம்! (வந்தார்கள்)" என்றே சொல்வார்கள். (ஆயினும், அது பயன் அளிக்காது. ஏனென்றால்,) நிராகரிப்பவர்களுக்கு வேதனையைப் பற்றிய தீர்ப்பு உறுதியாகி விட்டது.

English Sahih:

And those who disbelieved will be driven to Hell in groups until, when they reach it, its gates are opened and its keepers will say, "Did there not come to you messengers from yourselves, reciting to you the verses of your Lord and warning you of the meeting of this Day of yours?" They will say, "Yes, but the word [i.e., decree] of punishment has come into effect upon the disbelievers." ([39] Az-Zumar : 71)

1 Jan Trust Foundation

(அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி| “உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) “ஆம் (வந்தார்கள்)” என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது.