Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௬

وَابْتَلُوا الْيَتٰمٰى حَتّٰىٓ اِذَا بَلَغُوا النِّكَاحَۚ فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْٓا اِلَيْهِمْ اَمْوَالَهُمْ ۚ وَلَا تَأْكُلُوْهَآ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ يَّكْبَرُوْا ۗ وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ ۚ وَمَنْ كَانَ فَقِيْرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوْفِ ۗ فَاِذَا دَفَعْتُمْ اِلَيْهِمْ اَمْوَالَهُمْ فَاَشْهِدُوْا عَلَيْهِمْ ۗ وَكَفٰى بِاللّٰهِ حَسِيْبًا   ( النساء: ٦ )

And test
وَٱبْتَلُوا۟
சோதியுங்கள்
the orphans
ٱلْيَتَٰمَىٰ
அநாதைகளை
until
حَتَّىٰٓ
இறுதியாக
[when] they reach[ed]
إِذَا بَلَغُوا۟
அவர்கள் அடைந்தால்
(the age of) marriage
ٱلنِّكَاحَ
திருமணத்தை
then if you perceive
فَإِنْ ءَانَسْتُم
நீங்கள் கண்டால்
in them
مِّنْهُمْ
அவர்களிடம்
sound judgement
رُشْدًا
தெளிவான அறிவை
then deliver
فَٱدْفَعُوٓا۟
ஒப்படையுங்கள்
to them
إِلَيْهِمْ
அவர்களிடம்
their wealth
أَمْوَٰلَهُمْۖ
செல்வங்களை/ அவர்களுடைய
And (do) not eat it
وَلَا تَأْكُلُوهَآ
சாப்பிடாதீர்கள் / அவற்றை
extravagantly
إِسْرَافًا
அளவு கடந்து
and hastily
وَبِدَارًا
இன்னும் அவரை அவசரமாக
(fearing) that they will grow up
أَن يَكْبَرُوا۟ۚ
அவர்கள் பெரியவர்களாகுவதை
And whoever
وَمَن
எவர்
is
كَانَ
இருக்கிறார்
rich
غَنِيًّا
செல்வந்தராக
then he should refrain
فَلْيَسْتَعْفِفْۖ
அவர் தவிர்க்கவும்
and whoever
وَمَن
இன்னும் எவர்
is
كَانَ
இருக்கிறார்
poor
فَقِيرًا
ஏழையாக
then let him eat (of it)
فَلْيَأْكُلْ
புசிக்கவும்
in a fair manner
بِٱلْمَعْرُوفِۚ
முறையுடன்
Then when you deliver
فَإِذَا دَفَعْتُمْ
நீங்கள் ஒப்படைத்தால்
to them
إِلَيْهِمْ
அவர்களிடம்
their wealth
أَمْوَٰلَهُمْ
செல்வங்களை/ அவர்களுடைய
then take witnesses
فَأَشْهِدُوا۟
சாட்சியாக்குங்கள்
on them
عَلَيْهِمْۚ
அவர்கள் மீது
And is sufficient
وَكَفَىٰ
இன்னும் போதுமானவன்
Allah
بِٱللَّهِ
அல்லாஹ்
(as) a Reckoner
حَسِيبًا
துல்லியமாக கணக்கெடுப்பவனாக

Wabtalul yataamaa hattaaa izaa balaghun nikaaha fa in aanastum minhum rushdan fad fa'ooo ilaihim amwaalahum wa laa taa kuloohaaa israafanw wa bidaaran ai yakbaroo; wa mai kaana ghaniyyan falyasta' fif wa mai kaana faqeeran falyaakul bilma'roof; fa izaa dafa'tum ilaihim amwaalahum fa'ashhidoo 'alaihim; wa kafaa billaahi Haseeba (an-Nisāʾ 4:6)

Abdul Hameed Baqavi:

அன்றி, அநாதை(ச் சிறுவர்)களை (நல்லொழுக்கம், கல்வி, தொழில் திறமைகளை கற்பித்து)ச் சோதித்து வாருங்கள். அவர்கள் திருமண பருவத்தை அடைந்த பின்னர் (தங்கள் சொத்தை நிர்வகிக்கக் கூடிய) பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய பொருள்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் பொருள்களைப் பெற்றுக் கொண்டு) விடுவார்கள் என்ற எண்ணத்தின் மீது, அவர்களுடைய பொருள்களை அவசரமாகவும் அளவு கடந்தும் சாப்பிட்டு விடாதீர்கள். (அநாதையின் பொருள்களுடைய பொறுப்பாளர்) பணக்காரராக இருந்தால் (தனக்காக அநாதையின் பொருள்களிலிருந்து யாதொன்றையும் பயன் பெறாமல்) தவிர்த்துக் கொள்ளவும். அவர் ஏழையாக இருந்தாலோ முறையான அளவு (அதிலிருந்து) புசிக்கலாம். அவர்களுடைய பொருள்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் அதற்காக சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (உண்மைக்) கணக்கை அறிய அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான். (ஆகவே அவர்களுடைய கணக்கில் ஏதும் மோசம் செய்யாதீர்கள்.)

English Sahih:

And test the orphans [in their abilities] until they reach marriageable age. Then if you perceive in them sound judgement, release their property to them. And do not consume it excessively and quickly, [anticipating] that they will grow up. And whoever, [when acting as guardian], is self-sufficient should refrain [from taking a fee]; and whoever is poor – let him take according to what is acceptable. Then when you release their property to them, bring witnesses upon them. And sufficient is Allah as Accountant. ([4] An-Nisa : 6)

1 Jan Trust Foundation

அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.