Skip to main content

ஸூரத்துல் முஃமின் வசனம் ௧௧

قَالُوْا رَبَّنَآ اَمَتَّنَا اثْنَتَيْنِ وَاَحْيَيْتَنَا اثْنَتَيْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوْبِنَا فَهَلْ اِلٰى خُرُوْجٍ مِّنْ سَبِيْلٍ  ( غافر: ١١ )

They (will) say
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
"Our Lord!
رَبَّنَآ
எங்கள் இறைவா!
You gave us death
أَمَتَّنَا
நீ எங்களுக்கு மரணத்தைக் கொடுத்தாய்
twice
ٱثْنَتَيْنِ
இருமுறை
and You gave us life
وَأَحْيَيْتَنَا
எங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தாய்
twice
ٱثْنَتَيْنِ
இருமுறை
and we confess
فَٱعْتَرَفْنَا
நாங்கள் ஒப்புக் கொண்டோம்
our sins
بِذُنُوبِنَا
எங்கள் பாவங்களை
So is (there) to get out
فَهَلْ إِلَىٰ خُرُوجٍ
வெளியேறுவதற்கு ஏதேனும் உண்டா?
any way?"
مِّن سَبِيلٍ
வழி

Qaaloo Rabbanaaa amat tanasnataini wa ahyaitanas nataini fa'tarafnaa bizunoo binaa fahal ilaa khuroojim min sabeel (Ghāfir 40:11)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள், "எங்கள் இறைவனே! இருமுறை நீ எங்களை மரணிக்கச் செய்தாய்; இருமுறை நீ எங்களுக்கு உயிர் கொடுத்தாய். நாங்கள் எங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு விண்ணப்பம் செய்கின்றோம். ஆகவே, (இதில் இருந்து நாங்கள்) வெளிப்பட ஏதும் வழி உண்டா?" என்று கேட்பார்கள்.

English Sahih:

They will say, "Our Lord, You made us lifeless twice and gave us life twice, and we have confessed our sins. So is there to an exit any way?" ([40] Ghafir : 11)

1 Jan Trust Foundation

அதற்கவர்கள்| “எங்கள் இறைவனே! நீ எங்களை இருமுறை மரணமடையச் செய்தாய்; இருமுறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?” எனக் கூறுவர்.