ذٰلِكُمْ بِاَنَّهٗٓ اِذَا دُعِيَ اللّٰهُ وَحْدَهٗ كَفَرْتُمْۚ وَاِنْ يُّشْرَكْ بِهٖ تُؤْمِنُوْا ۗفَالْحُكْمُ لِلّٰهِ الْعَلِيِّ الْكَبِيْرِ ( غافر: ١٢ )
Zaalikum bi annahooo izaa du'iyal laahu wahdahoo kafartum wa iny yushrak bihee tu'minoo; falhukmu lillaahil 'Aliyyil Kabeer (Ghāfir 40:12)
Abdul Hameed Baqavi:
(அதற்கு இறைவன்,) "உங்களுக்கு இ(த்தண்டனை வந்த)தன் காரணமாவது: அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறினால், அதனை நீங்கள் மறுத்தீர்கள். அவனுக்கு எவரும் இணை உண்டு என்று கூறினால், அதனை நீங்கள் நம்பினீர்கள்! ஆதலால், (இன்றைய தினம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் இவ்வேதனை) மிகப் பெரியவனும், மேலானவனுமாகிய அல்லாஹ்வுடைய தீர்ப்பே!" (என்று கூறுவான்).
English Sahih:
[They will be told], "That is because, when Allah was called upon alone, you disbelieved; but if others were associated with Him, you believed. So the judgement is with Allah, the Most High, the Grand." ([40] Ghafir : 12)
1 Jan Trust Foundation
(பதில் கூறப்படும்|) “அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது.”