(மரணித்த) அவர்கள் அந்நாளில் (சமாதிகளிலிருந்து) வெளிப்பட்டு(த் தங்கள் இறைவனின்) முன் வந்து நிற்பார்கள். அவர்கள் செய்த யாதொரு விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்து விடாது. (அவர்களை நோக்கி,) இன்றைய தினம், "எவருடைய ஆட்சி? (என்று கேட்டு அனைவரையும்) அடக்கி ஆளும் ஒருவனாகிய அந்த அல்லாஹ்வுக்குரியதே!" (என்றும் பதில் கூறப்படும்).
English Sahih:
The Day they come forth nothing concerning them will be concealed from Allah. To whom belongs [all] sovereignty this Day? To Allah, the One, the Prevailing. ([40] Ghafir : 16)
1 Jan Trust Foundation
அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது; அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் - ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே யாகும்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (கப்ருகளில் இருந்து) வெளிப்பட்டு நிற்கின்ற (மறுமை) நாளைப் பற்றி (அவர்களை எச்சரிப்பதற்காக) (வேதத்தை இறக்கினான்). அவர்களில் எதுவும் அல்லாஹ்வின் முன்னால் மறைந்துவிடாது. இன்று ஆட்சி யாருக்கு உரியது? ஒருவனும் அடக்கி ஆள்பவனுமாகிய அல்லாஹ்விற்கே உரியது.