Skip to main content

ஸூரத்துல் முஃமின் வசனம் ௭௭

فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۚفَاِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِيْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّيَنَّكَ فَاِلَيْنَا يُرْجَعُوْنَ  ( غافر: ٧٧ )

So be patient;
فَٱصْبِرْ
ஆகவே, பொறுமையாக இருப்பீராக!
indeed (the) Promise
إِنَّ وَعْدَ
நிச்சயமாக வாக்கு
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
(is) true
حَقٌّۚ
உண்மையானதே!
And whether We show you
فَإِمَّا نُرِيَنَّكَ
ஒன்று/நாம் உங்களுக்கு காண்பிப்போம்
some
بَعْضَ
சிலதை
(of) what We have promised them
ٱلَّذِى نَعِدُهُمْ
அவர்களை நாம் எச்சரித்தவற்றில்
or We cause you to die
أَوْ نَتَوَفَّيَنَّكَ
அல்லது/ உம்மை உயிர் கைப்பற்றிக் கொள்வோம்
then to Us
فَإِلَيْنَا
நம் பக்கம்தான்
they will be returned
يُرْجَعُونَ
அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்

Fasbir inna wa'dal laahi haqq; fa immaa nuriyannak ba'dal lazee na'i duhum aw natawaffayannaka fa ilainaa yurja'oon (Ghāfir 40:77)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் பொறுமையுடன் உறுதியாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. அவர்களுக்கு பயமுறுத்தப்பட்ட வேதனைகளில் சிலவற்றை (உங்களது வாழ்நாளில்) நாம் உங்களுக்குக் காண்பித்தாலும் சரி அல்லது (அவை வருவதற்கு முன்னதாகவே) நாம் உங்களைக் கைப்பற்றி (நீங்கள் இறந்து) விட்டாலும் சரி (எவ்விதத்திலும்,) நிச்சயமாக அவர்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.

English Sahih:

So be patient, [O Muhammad]; indeed, the promise of Allah is truth. And whether We show you some of what We have promised them or We take you in death, it is to Us they will be returned. ([40] Ghafir : 77)

1 Jan Trust Foundation

ஆகவே, (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சிலவற்றை, நாம் உமக்குக் காண்பித்தாலும் அல்லது அதற்கு முன்னரே நிச்சயமாக நாம் உம்மை மரணமடையச் செய்தாலும், அவர்கள் நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்.