Skip to main content

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௪௪

وَلَوْ جَعَلْنٰهُ قُرْاٰنًا اَعْجَمِيًّا لَّقَالُوْا لَوْلَا فُصِّلَتْ اٰيٰتُهٗ ۗ ءَاَ۬عْجَمِيٌّ وَّعَرَبِيٌّ ۗ قُلْ هُوَ لِلَّذِيْنَ اٰمَنُوْا هُدًى وَّشِفَاۤءٌ ۗوَالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ فِيْٓ اٰذَانِهِمْ وَقْرٌ وَّهُوَ عَلَيْهِمْ عَمًىۗ اُولٰۤىِٕكَ يُنَادَوْنَ مِنْ مَّكَانٍۢ بَعِيْدٍ ࣖ  ( فصلت: ٤٤ )

And if We (had) made it
وَلَوْ جَعَلْنَٰهُ
நாம் இதை ஆக்கி இருந்தால்
a Quran
قُرْءَانًا
குர்ஆனாக
(in) a foreign (language)
أَعْجَمِيًّا
அரபி அல்லாத மொழி
they (would have) said
لَّقَالُوا۟
கூறியிருப்பார்கள்
"Why not are explained in detail
لَوْلَا فُصِّلَتْ
விவரிக்கப்பட்டிருக்க வேண்டாமா?
its verses?
ءَايَٰتُهُۥٓۖ
இதன் வசனங்கள்
(Is it) a foreign (language)
ءَا۬عْجَمِىٌّ
அரபி அல்லாத ஒரு மொழியிலா!
and an Arab?"
وَعَرَبِىٌّۗ
இன்னும் அரபி ஆயிற்றே !
Say "It (is)
قُلْ هُوَ
கூறுவீராக!/இது
for those who believe
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
a guidance
هُدًى
நேர்வழி(யும்)
and a healing"
وَشِفَآءٌۖ
நிவாரணமும்
And those who (do) not believe
وَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ
எவர்கள்/நம்பிக்கை கொள்ளவில்லையோ
in their ears
فِىٓ ءَاذَانِهِمْ
அவர்களின் காதுகளில்
(is) deafness
وَقْرٌ
செவிட்டுத்தனம்
and it
وَهُوَ
அது
(is) for them
عَلَيْهِمْ
அவர்கள் மீது
blindness
عَمًىۚ
மறைந்திருக்கிறது
Those
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
are being called
يُنَادَوْنَ
அழைக்கப்படுவார்கள்
from a place
مِن مَّكَانٍۭ
இடத்தில் இருந்து
far"
بَعِيدٍ
மிக தூரமான

Wa law ja'alnaahu Qur-aanan A'jamiyyal laqaaloo law laa fussilat Aayaatuhoo 'a A'jamiyyunw wa 'Arabiyy; qul huwa lillazeena aamanoo hudanw wa shifaaa'unw wallazeena la yu'minoona feee aazaanihim waqrunw wa huwa 'alaihim 'amaa; ulaaa'ika yunaadawna mim maakaanim ba'eed (Fuṣṣilat 41:44)

Abdul Hameed Baqavi:

இதனை அரபி அல்லாத மொழியில் நாம் இறக்கி வைத்திருந்தால், (இந்த மக்காவாசிகள்) இதனுடைய வசனங்கள் (நம்முடைய அரபி மொழியில்) விவரித்துக் கூறப்பட்டிருக்க வேண்டாமா? என்றும், இதுவோ அரபி அல்லாத மொழி; நாமோ அதனை அறியாத) அரபிகள் என்றும் கூறுவார்கள். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இது (அவர்களுடைய அரபி மொழியில் இருப்பதுடன்) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேரான வழியாகவும், (சந்தேக நோயுள்ள உள்ளங்களுக்கு) நல்லதொரு பரிகாரமாகவும் இருக்கின்றது. எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுடைய காதுகளுக்கு செவிடாகவும், அவர்களுடைய பார்வையை போக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. அவர்கள் (உங்கள் சமீபத்திலிருந்த போதிலும்) வெகு தொலை தூரத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).

English Sahih:

And if We had made it a foreign [i.e., non-Arabic] Quran, they would have said, "Why are its verses not explained in detail [in our language]? Is it a foreign [recitation] and an Arab [messenger]?" Say, "It is, for those who believe, a guidance and cure." And those who do not believe – in their ears is deafness, and it is upon them blindness. Those are being called from a distant place. ([41] Fussilat : 44)

1 Jan Trust Foundation

நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுத்தனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).