Wa law laaa any yakoonan naasu ummatanw waahidatal laja'alnaa limany yakfuru bir Rahmaani libu yootihim suqufam min fiddatinw wa ma'aarija 'alaihaa yazharoon (az-Zukhruf 43:33)
(இந்நிராகரிப்பவர்களின் செல்வ செழிப்பைக் கண்டு, ஆசை கொண்ட மற்ற) மனிதர்கள் அனைவருமே (அவர்களைப் போல் நிராகரிக்கும்) ஒரே வகுப்பினராக ஆகிவிடுவார்கள் என்று இல்லாதிருப்பின் (அல்லாஹ்வாகிய) ரஹ்மானை நிராகரிப்ப வர்களின் வீட்டு முகடுகளையும் அதன்மீது அவர்கள் ஏறிச் செல்லும் படிக்கட்டுகளையும் கூட நாம் வெள்ளியினால் ஆக்கி விடுவோம்.
English Sahih:
And if it were not that the people would become one community [of disbelievers], We would have made for those who disbelieve in the Most Merciful – for their houses – ceilings and stairways of silver upon which to mount. ([43] Az-Zukhruf : 33)
1 Jan Trust Foundation
நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மக்கள் எல்லாம் (குஃப்ர் - நிராகரிப்பில் மாறிவிடுவார்கள், நிராகரிக்கின்ற) ஒரே ஒரு சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்று இல்லையெனில் ரஹ்மானை (-அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களுக்கு - அவர்களின் வீடுகளுக்கு வெள்ளியினால் ஆன முகடுகளையும் ஏணிகளையும் நாம் ஆக்கியிருப்போம். அவற்றின் மீது (-அந்த ஏணிகளின் மீது) அவர்கள் (தங்கள் வீட்டு மாடிகளுக்கு) ஏறுவார்கள்.