இதன் காரணமாவது: நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள். இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட்டது (என்றும் கூறப்படும்). இன்றைய தினம் அதிலிருந்து அவர்கள் வெளிச்செல்ல விடப்படமாட்டார்கள். அன்றி, அவர்களுடைய மன்னிப்புக்கோரலும் அங்கீகரிக்கப்பட மாட்டாது.
English Sahih:
That is because you took the verses of Allah in ridicule, and worldly life deluded you." So that Day they will not be removed from it, nor will they be asked to appease [Allah]. ([45] Al-Jathiyah : 35)
1 Jan Trust Foundation
நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏளனமாக எடுத்துக் கொண்டதனாலும் இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி ஏமாற்றி விட்டதினாலுமே இந்த நிலை. இன்றைய தினத்தில் அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்; மன்னிப்பளிக்கப்படவும் மாட்டார்கள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதற்கு காரணம் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுத்துக் கொண்டீர்கள். உங்களை உலக வாழ்க்கை மயக்கிவிட்டது. ஆகவே, இன்று அதிலிருந்து (-நரகத்தில் இருந்து) அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள். இன்னும் அவர்களிடமிருந்து காரணங்கள் அங்கீகரிக்கப்படாது.