இத்தகையவர்கள் செய்த நன்மைகள் அனைத்தையும் நாம் அங்கீகரித்துக் கொண்டு, சுவனவாசிகளான இவர்களின் பாவங்களையும் புறக்கணித்து விடுவோம். இவர்களுக்கு அளிக்கப்பட்ட இவ்வாக்கு உண்மையான வாக்குறுதியாகும்.
English Sahih:
Those are the ones from whom We will accept the best of what they did and overlook their misdeeds, [their being] among the companions of Paradise. [That is] the promise of truth which they had been promised. ([46] Al-Ahqaf : 16)
1 Jan Trust Foundation
சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான - நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம்; இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மையான வாக்குறுதியாகும்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், இவர்கள் செய்தவற்றில் மிக அழகானதை நாம் இவர்களிடமிருந்து ஏற்றுக் கொள்வோம். இவர்களின் பாவங்களை நாம் மன்னித்து விடுவோம். இவர்கள் சொர்க்க வாசிகளில் இருப்பார்கள். இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த உண்மையான வாக்காகும் இது.