Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௦௬

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا شَهَادَةُ بَيْنِكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ حِيْنَ الْوَصِيَّةِ اثْنٰنِ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ اَوْ اٰخَرٰنِ مِنْ غَيْرِكُمْ اِنْ اَنْتُمْ ضَرَبْتُمْ فِى الْاَرْضِ فَاَصَابَتْكُمْ مُّصِيْبَةُ الْمَوْتِۗ تَحْبِسُوْنَهُمَا مِنْۢ بَعْدِ الصَّلٰوةِ فَيُقْسِمٰنِ بِاللّٰهِ اِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِيْ بِهٖ ثَمَنًا وَّلَوْ كَانَ ذَا قُرْبٰىۙ وَلَا نَكْتُمُ شَهَادَةَ اللّٰهِ اِنَّآ اِذًا لَّمِنَ الْاٰثِمِيْنَ   ( المائدة: ١٠٦ )

O you who believe!
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
(Take) testimony
شَهَٰدَةُ
சாட்சியாக இருக்க வேண்டும்
among you
بَيْنِكُمْ
உங்கள் மத்தியில்
when approaches
إِذَا حَضَرَ
சமீபித்தால்
one of you
أَحَدَكُمُ
உங்களில் ஒருவருக்கு
[the] death
ٱلْمَوْتُ
மரணம்
(at the) time (of making)
حِينَ
நேரத்தில்
[the] a will
ٱلْوَصِيَّةِ
மரண சாஸனம்
two
ٱثْنَانِ
இருவர்
men just
ذَوَا عَدْلٍ
நீதமான இருவர்
among you
مِّنكُمْ
உங்களில்
or
أَوْ
அல்லது
two others
ءَاخَرَانِ
வேறிருவர்
from
مِنْ
சேர்ந்த
other than you
غَيْرِكُمْ
நீங்கள் அல்லாத
if you (are) travel(ing)
إِنْ أَنتُمْ ضَرَبْتُمْ
நீங்கள் பயணித்தால்
in the earth
فِى ٱلْأَرْضِ
பூமியில்
then befalls you
فَأَصَٰبَتْكُم
அடைந்தால்/உங்களை
calamity
مُّصِيبَةُ
சோதனை
(of) [the] death
ٱلْمَوْتِۚ
மரணம்
Detain both of them
تَحْبِسُونَهُمَا
தடுத்து வையுங்கள்/அவ்விருவரை
from after
مِنۢ بَعْدِ
பின்னர்
the prayer
ٱلصَّلَوٰةِ
தொழுகை
and let them both swear
فَيُقْسِمَانِ
அவ்விருவரும் சத்தியம் செய்யவேண்டும்
by Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
if you doubt
إِنِ ٱرْتَبْتُمْ
நீங்கள் சந்தேகித்தால்
"Not "we will exchange
لَا نَشْتَرِى
வாங்கமாட்டோம்
it for
بِهِۦ
அதற்குப் பகரமாக
a price
ثَمَنًا
ஓர் ஆதாயத்தை
even if he is
وَلَوْ كَانَ
அவர் இருந்தாலும்
(of) a near relative
ذَا قُرْبَىٰۙ
உறவினராக
and not we will conceal
وَلَا نَكْتُمُ
இன்னும் மறைக்க மாட்டோம்
testimony
شَهَٰدَةَ
சாட்சி கூறியதில்
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்விற்காக
Indeed, we
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
then
إِذًا
அப்போது
(will) surely (be) of the sinners"
لَّمِنَ ٱلْءَاثِمِينَ
பாவிகளில்

Yaaa aiyuhal lazeena aamanoo shahaadatu bainikum izaa hadara ahadakumul mawtu heenal wasiyyatis naani zawaa 'adlim minkum aw aakharaani min ghairikum in antum darabtum fil ardi fa asaabatkum museebatul mawt; tahbi soonahumaa mim ba'dis Salaati fa yuqsimaani billaahi inirtabtum laa nashtaree bihee samananw wa law kaana zaa qurbaa wa laa naktumu shahaadatal laahi innaaa izal laminal aasimeen (al-Māʾidah 5:106)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து (அவர் மரண சாஸனம் கூற விரும்பினால்) அவர் மரண சாஸனம் (வஸீயத்) கூறும் சமயத்தில் உங்களில் நம்பிக்கைக்குரிய (நேர்மையான) இருவர் சாட்சியாக இருக்கவேண்டும். அல்லது உங்களில் எவரும் பூமியில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொழுது மரணம் சமீபித்தால் (அது சமயம் சாஸனத்தின் சாட்சிக்காக முஸ்லிமாகிய இருவர் கிடைக்காவிடில்) உங்களை அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்கவும். (இந்தச் சாட்சிகள் கூறும் விஷயத்தில் உங்களுக்குச் சந்தேகமேற்பட்டால் அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும். அவ்விருவரும் "நாங்கள் கூறிய (சாட்சியத்)தைக் கொண்டு யாதொரு பொருளையும் அதற்காக நாங்கள் அடைய விரும்பவில்லை. அவர்கள் எங்கள் உறவினர்களாக இருந்தபோதிலும் நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறியதில் யாதொன்றையும் மறைக்கவே இல்லை. அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.

English Sahih:

O you who have believed, testimony [should be taken] among you when death approaches one of you at the time of bequest – [that of] two just men from among you or two others from outside if you are traveling through the land and the disaster of death should strike you. Detain them after the prayer and let them both swear by Allah if you doubt [their testimony, saying], "We will not exchange it [i.e., our oath] for a price [i.e., worldly gain], even if he should be a near relative, and we will not withhold the testimony of [i.e., ordained by] Allah. Indeed, we would then be of the sinful." ([5] Al-Ma'idah : 106)

1 Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரணசாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடையாவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும்; இவ்விருவரும் “நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை; அவர்கள், எங்களுடைய பந்துக்களாயிருந்த போதிலும், நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சியங் கூறியதில் எதையும் மறைக்கவில்லை; அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாயிவிடுவோம்“ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.