Skip to main content
bismillah

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
أَوْفُوا۟
நிறைவேற்றுங்கள்
بِٱلْعُقُودِۚ
உடன்படிக்கைகளை
أُحِلَّتْ
ஆகுமாக்கப்பட்டன
لَكُم
உங்களுக்கு
بَهِيمَةُ ٱلْأَنْعَٰمِ
கால்நடைகள்
إِلَّا
தவிர
مَا
எவை
يُتْلَىٰ
ஓதிக்காட்டப்படுகிறது
عَلَيْكُمْ
உங்கள் மீது
غَيْرَ مُحِلِّى
ஆகுமாக்காதீர்கள்
ٱلصَّيْدِ
வேட்டையாடுவதை
وَأَنتُمْ
நீங்கள்
حُرُمٌۗ
இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போது
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَحْكُمُ
சட்டமாக்குகிறான்
مَا
எதை
يُرِيدُ
நாடுகிறான்

Yaaa aiyuhal lazeena aamanoo awfoo bil'uqood; uhillat lakum baheematul an'aami illaa maa yutlaa 'alaikum ghaira muhillis saidi wa antum hurum; innal laaha yahkumu maa yureed

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். அன்றி, உங்களுக்கு (பின்வரும் 3ஆம் வசனத்தில்) ஓதி காட்டப்படுபவற்றைத் தவிர (மற்ற) கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டிருக் கின்றன. (அவற்றை எந்நேரத்திலும் புசிக்கலாம்; வேட்டையாடலாம். எனினும்) நீங்கள் இஹ்ராம் (ஹஜ் பயண உடை) அணிந்திருக்கும் சமயத்தில் (இவைகளை) வேட்டையாடுவது உங்களுக்கு ஆகுமானதல்ல, நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதை (உங்களுக்குக்) கட்டளையிடுகின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تُحِلُّوا۟
ஆகுமாக்காதீர்கள்
شَعَٰٓئِرَ
அடையாளங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَلَا ٱلشَّهْرَ
இன்னும் மாதத்தை
ٱلْحَرَامَ
புனிதமானது
وَلَا ٱلْهَدْىَ
இன்னும் குர்பானியை
وَلَا ٱلْقَلَٰٓئِدَ
இன்னும் மாலையிடப்பட்ட குர்பானிகளை
وَلَآ ءَآمِّينَ
இன்னும் நாடுபவர்களை
ٱلْبَيْتَ
(கஅபா)ஆலயத்தை
ٱلْحَرَامَ
புனிதமானது
يَبْتَغُونَ
தேடியவர்களாக
فَضْلًا
அருளை
مِّن رَّبِّهِمْ
தங்கள் இறைவனிடமிருந்து
وَرِضْوَٰنًاۚ
இன்னும் பொருத்தத்தை
وَإِذَا حَلَلْتُمْ
நீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால்
فَٱصْطَادُوا۟ۚ
வேட்டையாடுங்கள்
وَلَا يَجْرِمَنَّكُمْ
உங்களை தூண்ட வேண்டாம்
شَنَـَٔانُ
துவேஷம்
قَوْمٍ
சமுதாயத்தின்
أَن
அவர்களை தடுத்த காரணத்தால்
صَدُّوكُمْ
அவர்களை தடுத்த காரணத்தால் உங்களை
عَنِ ٱلْمَسْجِدِ
மஸ்ஜிதை விட்டு
ٱلْحَرَامِ
புனிதமானது
أَن تَعْتَدُواۘ
நீங்கள் வரம்புமீறுவது
وَتَعَاوَنُوا۟
ஒருவருக்கொருவர் உதவுங்கள்
عَلَى ٱلْبِرِّ
நன்மைக்கு
وَٱلتَّقْوَىٰۖ
இன்னும் இறையச்சம்
وَلَا تَعَاوَنُوا۟
ஒருவருக்கொருவர் உதவாதீர்கள்
عَلَى ٱلْإِثْمِ
பாவத்திற்கு
وَٱلْعُدْوَٰنِۚ
இன்னும் அநியாயம்
وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
ٱللَّهَۖ
அல்லாஹ்வை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
شَدِيدُ
கடுமையானவன்
ٱلْعِقَابِ
தண்டனை

Yaaa aiyuhal lazeena aamanoo laa tuhilloo sha'aaa 'iral laahi wa lash Shahral Haraama wa lal hadya wa lal qalaaa'ida wa laa aaammeenal Baital Haraama yabtaghoona fadlam mir Rabbihim wa ridwaanaa; wa izaa halaltum fastaadoo; wa laa yajrimannakum shana aanu qawmin an saddookum 'anil Masjidil-Haraami an ta'tadoo; wa ta'aawanoo 'alalbirri wattaqwaa; wa laa ta'aawanoo 'alal ismi wal'udwaan; wattaqul laah; innal laaha shadeedul 'iqaab

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்களையும் (ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (குர்பானிகளுக்காக) அடையாளம் கட்டப்பட்டவைகளையும், தங்கள் இறைவனின் அருளையும், திருப்பொருத்தத்தையும் அடையக்கருதி கண்ணியமான அவனுடைய ஆலயத்தை நாடிச் செல்பவர்களையும் (அவமதிப்பதை) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் இஹ்ராமை நீக்கிவிட்டால் (அனுமதிக்கப்பட்டவைகளை) நீங்கள் வேட்டையாடலாம். கண்ணியமான மஸ்ஜிதுக்குச் செல்லாது உங்களைத் தடுத்துக்கொண்ட வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் (அவர்கள்மீது) நீங்கள் வரம்பு மீறும்படி உங்களைத் தூண்டாதிருக்கவும். அன்றி, நன்மைக்கும் (அல்லாஹ்வுடைய) இறை அச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் (அநியாயத்திற்கும்) நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வுக்கே நீங்கள் பயப்படுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், வேதனை செய்வதில் மிகக் கடுமையானவனாக இருக்கின்றான்.

Tafseer

حُرِّمَتْ
விலக்கப்பட்டன
عَلَيْكُمُ
உங்களுக்கு
ٱلْمَيْتَةُ
செத்தது
وَٱلدَّمُ
இன்னும் இரத்தம்
وَلَحْمُ ٱلْخِنزِيرِ
இன்னும் இறைச்சி/பன்றி
وَمَآ
இன்னும் எது
أُهِلَّ
பெயர் கூறப்பட்டது
لِغَيْرِ
அல்லாதவற்றிற்காக
ٱللَّهِ
அல்லாஹ்
بِهِۦ
அதை
وَٱلْمُنْخَنِقَةُ
இன்னும் கழுத்து நெருக்கிச் செத்தது
وَٱلْمَوْقُوذَةُ
இன்னும் அடிப்பட்டுச் செத்தது
وَٱلْمُتَرَدِّيَةُ
இன்னும் விழுந்து செத்தது
وَٱلنَّطِيحَةُ
இன்னும் கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது
وَمَآ أَكَلَ
இன்னும் எதை/தின்றது
ٱلسَّبُعُ
மிருகங்கள்
إِلَّا
தவிர
مَا ذَكَّيْتُمْ
எதை/அறுத்தீர்கள்
وَمَا ذُبِحَ
இன்னும் எது/அறுக்கப்பட்டது
عَلَى ٱلنُّصُبِ
மீது/நடப்பட்டவை, சிலைகள்
وَأَن تَسْتَقْسِمُوا۟
இன்னும் பாகம் பிரித்துக் கொள்வது
بِٱلْأَزْلَٰمِۚ
அம்புகளைக்கொண்டு
ذَٰلِكُمْ
இவை
فِسْقٌۗ ٱلْيَوْمَ
பாவம்/இன்று
يَئِسَ
நம்பிக்கை இழந்தனர்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
مِن
விட்டு
دِينِكُمْ
உங்கள் மார்க்கம்
فَلَا
ஆகவே பயப்படாதீர்கள்
تَخْشَوْهُمْ
ஆகவே பயப்படாதீர்கள் அவர்களை
وَٱخْشَوْنِۚ
என்னை பயப்படுங்கள்
ٱلْيَوْمَ
இன்று
أَكْمَلْتُ
முழுமையாக்கினேன்
لَكُمْ
உங்களுக்கு
دِينَكُمْ
உங்கள் மார்க்கத்தை
وَأَتْمَمْتُ
இன்னும் முழுமையாக்கினேன்
عَلَيْكُمْ
உங்கள் மீது
نِعْمَتِى
என் அருளை
وَرَضِيتُ
இன்னும் திருப்தியடைந்தேன்
لَكُمُ
உங்களுக்கு
ٱلْإِسْلَٰمَ
இஸ்லாமை
دِينًاۚ
மார்க்கமாக
فَمَنِ
ஆகவே எவர்
ٱضْطُرَّ
நிர்ப்பந்திக்கப்பட்டார்
فِى مَخْمَصَةٍ
கடுமையான பசியில்
غَيْرَ مُتَجَانِفٍ
சாயாதவராக
لِّإِثْمٍۙ
பாவத்தின் பக்கம்
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Hurrimat 'alaikumul maitatu waddamu wa lahmul khinzeeri wa maaa uhilla lighiril laahi bihee walmun khani qatu wal mawqoozatu wal mutarad diyatu wanna teehatu wa maaa akalas sabu'u illaa maa zakkaitum wa maa zubiha 'alan nusubi wa an tastaqsimoo bil azlaam; zaalikum fisq; alyawma ya'isal lazeena kafaroo min deenikum falaa takhshawhum wakh shawn; alyawma akmaltu lakum deenakum wa atmamtu 'alaikum ni'matee wa radeetu lakumul Islaama deenaa; famanidturra fee makhmasatin ghaira mutajaanifil li ismin fa innallaaha Ghafoorur Raheem

(நம்பிக்கையாளர்களே! தானாக) செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறப்பட்டவை ஆகியவைகளும், அடிப்பட்டுச் செத்ததும், (மேலிருந்து) விழுந்து செத்ததும், கழுத்து நெருக்கிச் செத்ததும், கொம்பால் குத்தப்பட்டுச் செத்ததும், (சிங்கப்பல்லும், வீர நகமுள்ள மாமிசம் தின்னும் மிருகங்களாகிய சிங்கம், புலி, சிறுத்தை போன்ற) ஐவாய் மிருகங்கள் கடித்(துச் செத்)தவையும் உங்களுக்கு விலக்கப்பட்டிக்கின்றன. (எனினும், இம்மிருகங்கள் வேட்டையாடிய) அவைகளில் (உயிரோடிருப்பவற்றில்) முறைப்படி (பிஸ்மில்லாஹ் சொல்லி) அறுக்கப்பட்டவைகளைத் தவிர. (அவ்வாறு அறுக்கப் பட்டவைகளைப் புசிக்கலாம். பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (ஸ்தம்பம், கொடி, பாவட்டா, சிலை போன்ற)வைகளுக்காக அறுக்கப் பட்டவைகளும், அம்பு எய்து (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வதும் (உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன.) இவை அனைத்தும் பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை (அழித்துவிடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இன்றைய தினம் இழந்துவிட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் (ஒரு சிறிதும்) பயப்படவேண்டாம். எனக்கே பயப்படுங்கள். இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தோம். (அங்கீகரித்துக் கொண்டோம்) எவரேனும், பாவம் செய்யும் எண்ணமின்றி பசியின் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவைகளைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (நிர்ப்பந்தத்திற்குள்ளான அவருடைய குற்றங்களை) மிகவும் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றான்.

Tafseer

يَسْـَٔلُونَكَ
கேட்கின்றனர்/உம்மிடம்
مَاذَآ
எவை
أُحِلَّ
ஆகுமாக்கப்பட்டன
لَهُمْۖ
அவர்களுக்கு
قُلْ
கூறுவீராக
أُحِلَّ
ஆகுமாக்கப்பட்டன
لَكُمُ
உங்களுக்கு
ٱلطَّيِّبَٰتُۙ
நல்லவை
وَمَا
இன்னும் எவை
عَلَّمْتُم
கற்றுக் கொடுத்தீர்கள்
مِّنَ ٱلْجَوَارِحِ
மிருகங்களில்
مُكَلِّبِينَ
வேட்டையாட பயிற்சி அளியுங்கள்
تُعَلِّمُونَهُنَّ
கற்று கொடுங்கள்/அவற்றுக்கு
مِمَّا
எவற்றிலிருந்து
عَلَّمَكُمُ
கற்பித்தான்/உங்களுக்கு
ٱللَّهُۖ
அல்லாஹ்
فَكُلُوا۟
ஆகவே புசியுங்கள்
مِمَّآ
எவற்றிலிருந்து
أَمْسَكْنَ
அவை தடுத்தன
عَلَيْكُمْ
உங்களுக்காக
وَٱذْكُرُوا۟
இன்னும் கூறுங்கள்
ٱسْمَ
பெயரை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْهِۖ
அவற்றின் மீது
وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
سَرِيعُ
தீவிரமானவன்
ٱلْحِسَابِ
கணக்கிடுவதில்

Yas'aloonaka maazaaa uhilla lahum; qul uhilla lakumuttaiyibaatu wa maa'allamtum minal jawaarihi mukallibeena tu'allimoonahunnamimmaa 'allamakumul laahu fakuloo mimmaaa amsakna 'alaikum wazkurus mal laahi 'alaih; wattaqul laah; innal laaha saree'ul hisaab

(நபியே! புசிக்க) தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவை எவை என்று அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "(சுத்தமான) நல்லவைகள், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி நீங்கள் வேட்டையாடும் (நாய், சிறுத்தை போன்ற) மிருகங்களுக்கு(ம், ராஜாளி போன்ற பறவைகளுக்கும்) வேட்டையாடக் கற்பித்து அவை (வேட்டையாடி,) உங்களுக்காகத் தடுத்(து வைத்)திருப்பவற்றையும், (அவை இறந்துவிட்டபோதிலும்) நீங்கள் புசிக்கலாம் (உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது). (எனினும், அவற்றை வேட்டைக்கு விடும்பொழுது "பிஸ்மில்லாஹ்" என்று) அல்லாஹ்வின் பெயரைக் கூறியே விடுங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன்.

Tafseer

ٱلْيَوْمَ
இன்று
أُحِلَّ
ஆகுமாக்கப்பட்டன
لَكُمُ
உங்களுக்கு
ٱلطَّيِّبَٰتُۖ
நல்லவை
وَطَعَامُ
இன்னும் உணவும்
ٱلَّذِينَ
எவர்களின்
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
ٱلْكِتَٰبَ
வேதம்
حِلٌّ
ஆகுமானது
لَّكُمْ
உங்களுக்கு
وَطَعَامُكُمْ
இன்னும் உங்கள் உணவு
حِلٌّ
ஆகுமானது
لَّهُمْۖ
அவர்களுக்கு
وَٱلْمُحْصَنَٰتُ
கற்புள்ள பெண்கள்
مِنَ
இருந்து
ٱلْمُؤْمِنَٰتِ
ஈமான் கொண்ட பெண்கள்
وَٱلْمُحْصَنَٰتُ
இன்னும் கற்புள்ள பெண்கள்
مِنَ ٱلَّذِينَ
எவர்களில்
أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்கள்
ٱلْكِتَٰبَ
வேதம்
مِن قَبْلِكُمْ
உங்களுக்குமுன்னர்
إِذَآ
நீங்கள்கொடுத்தால்
ءَاتَيْتُمُوهُنَّ
நீங்கள்கொடுத்தால் அவர்களுக்கு
أُجُورَهُنَّ
மணக்கொடைகளை அவர்களுடைய
مُحْصِنِينَ
கற்புள்ளவர்களாக
غَيْرَ
அன்றி
مُسَٰفِحِينَ
விபச்சாரர்களாக
وَلَا مُتَّخِذِىٓ
இன்னும் ஆக்காதவர்களாக
أَخْدَانٍۗ
இரகசிய தோழிகளை
وَمَن
எவர்
يَكْفُرْ
மறுக்கிறார்
بِٱلْإِيمَٰنِ
நம்பிக்கை கொள்ள
فَقَدْ
திட்டமாக
حَبِطَ
அழிந்து விடும்
عَمَلُهُۥ
அவருடைய செயல்
وَهُوَ
அவர்
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
مِنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்

Alyawma uhilla lakumut taiyibaatu wa ta'aamul lazeena ootul Kitaaba hillul lakum wa ta'aamukum hillul lahum wal muhsanaatu minal mu'minaati walmuhsanaatu minal lazeena ootul Kitaaba min qablikum izaaa aataitumoohunna ujoorahunna muhsineena ghaira musaafiheena wa laa muttakhizeee akhdaan; wa mai yakfur bil eemaani faqad habita 'amaluhoo wa huwa fil Aaakhirati minal khaasireen

(நம்பிக்கையாளர்களே!) இன்றுமுதல் நல்லவைகள் அனைத்தும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமாக்கப்பட்டுவிட்டன. வேதத்தையுடையவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்களுடைய உணவும் அவர்களுக்கு ஆகுமானதே! நம்பிக்கை கொண்ட கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட கற்புடைய பெண்களையும், விபச்சாரிகளாகவோ வைப்பாட்டிகளாகவோ கொள்ளாமல், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மஹர்களையும் கொடுத்து (திருமணம் செய்து) கொள்வது (உங்களுக்கு ஆகும்.) அன்றி, எவன் நம்பிக்கை கொண்டதன் பின்னர் (இவற்றை) நிராகரிக்கின்றானோ அவனுடைய நற்செயல்கள் நிச்சயமாக அழிந்துவிடும். மறுமையிலோ அவன் (முற்றிலும்) நஷ்டமடைந்தவனாகவே இருப்பான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
إِذَا قُمْتُمْ
நீங்கள் நின்றால்
إِلَى ٱلصَّلَوٰةِ
தொழுகைக்கு
فَٱغْسِلُوا۟
கழுகுங்கள்
وُجُوهَكُمْ
உங்கள் முகங்களை
وَأَيْدِيَكُمْ
இன்னும் கைகளை/உங்கள்
إِلَى
வரை
ٱلْمَرَافِقِ
முழங்கைகள்
وَٱمْسَحُوا۟
இன்னும் தடவுங்கள்
بِرُءُوسِكُمْ
உங்கள் தலைகளில்
وَأَرْجُلَكُمْ
இன்னும் உங்கள் கால்களை
إِلَى
வரை
ٱلْكَعْبَيْنِۚ
இரு கணுக்கால்கள்
وَإِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
جُنُبًا
முழுக்காளிகளாக
فَٱطَّهَّرُوا۟ۚ
நன்கு சுத்தமாகுங்கள்
وَإِن كُنتُم
இன்னும் நீங்கள் இருந்தால்
مَّرْضَىٰٓ
நோயாளிகளாக
أَوْ
அல்லது
عَلَىٰ سَفَرٍ
பயணத்தில்
أَوْ
அல்லது
جَآءَ
வந்தார்
أَحَدٌ
ஒருவர்
مِّنكُم
உங்களில்
مِّنَ
இருந்து
ٱلْغَآئِطِ
மலஜல பாதை
أَوْ
அல்லது
لَٰمَسْتُمُ
உறவு கொண்டீர்கள்
ٱلنِّسَآءَ
பெண்களுடன்
فَلَمْ تَجِدُوا۟
பெறவில்லை
مَآءً
தண்ணீரை
فَتَيَمَّمُوا۟
நாடுங்கள்
صَعِيدًا
மண்ணை
طَيِّبًا
சுத்தமானது
فَٱمْسَحُوا۟
இன்னும் தடவுங்கள்
بِوُجُوهِكُمْ
முகங்களை/உங்கள்
وَأَيْدِيكُم
இன்னும் கைகளை/உங்கள்
مِّنْهُۚ
அதில்
مَا يُرِيدُ
நாடமாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
لِيَجْعَلَ
ஆக்குவதற்கு
عَلَيْكُم
உங்கள் மீது
مِّنْ حَرَجٍ
சிரமத்தை
وَلَٰكِن
எனினும்
يُرِيدُ
நாடுகிறான்
لِيُطَهِّرَكُمْ
உங்களைபரிசுத்தமாக்க
وَلِيُتِمَّ
இன்னும் முழுமையாக்க
نِعْمَتَهُۥ
தன் அருளை
عَلَيْكُمْ
உங்கள் மீது
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Yaaa aiyuhal lazeena aamanoo izaa qumtum ilas Salaati faghsiloo wujoohakum wa Aidiyakum ilal maraafiqi wamsahoo biru'oosikum wa arjulakum ilal ka'bayn; wa in kuntum junuban fattahharoo; wain kuntum mardaaa aw'alaa safarin aw jaaa'a ahadum minkum minal ghaaa'iti aw laamastumunnisaaa'a falam tajidoo maaa'an fatayammamoo sa'eedan taiyiban famsahoo biwujoohikum wa aideekum minh; ma yureedul laahu liyaj'ala 'alaikum min harajinw wa laakidy yureedu liyutahhirakum wa liyutimma m'matahoo 'alaikum la'allakum tashkuroon

நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரையில் உங்கள் இரு பாதங்களையும் கழுவிக் கொள்ளுங்கள். அன்றி, (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை(த் தடவி) "மஸஹு" செய்து கொள்ளுங்கள். நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் (கை கால்களை மட்டும் கழுவினால் போதாது. உடல் முழுவதையும் கழுவி) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அன்றி, நீங்கள் நோயாளிகளாக இருந்தோ அல்லது பயணத்தில் இருந்தோ அல்லது உங்களில் எவரும் மலஜல பாதைக்குச் சென்று வந்திருந்தோ அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தோ (தொழுகையின் நேரம் வந்து உங்களைச் சுத்தம் செய்து கொள்வதற்கு வேண்டிய) தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் (தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது) சுத்தமான மண்ணை (உங்கள் கைகளால் தொட்டு அதனை)க் கொண்டு உங்கள் முகங்களையும், கைகளையும் துடைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கஷ்டத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும், அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகின்றான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!

Tafseer

وَٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
نِعْمَةَ
அருளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَمِيثَٰقَهُ
இன்னும் அவனுடைய உறுதிமொழியை
ٱلَّذِى
எது/உங்களிடம் உறுதி மொழி வாங்கினான்
وَاثَقَكُم
அதை
بِهِۦٓ
போது
إِذْ قُلْتُمْ
கூறினீர்கள்
سَمِعْنَا
செவிமடுத்தோம்
وَأَطَعْنَاۖ
இன்னும் கீழ்ப்படிந்தோம்
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِذَاتِ
உள்ளவற்றை
ٱلصُّدُورِ
நெஞ்சங்களில்

Wazkuroo ni'matal laahi 'alaikum wa meesaaqahul lazee waasaqakum biheee iz qultum sami'naa wa ata'naa wattaqul laah; innal laaha 'aleemum bizaatis sudoor

(யூதர்களே!) உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் (உங்களிடம்) வாக்குறுதி வாங்கியபொழுது அதனை நீங்கள் உறுதிப்படுத்தி "நாங்கள் செவிசாய்த்தோம். (உனக்கு) வழிப்பட்டோம்" என்று நீங்கள் கூறியதையும் ஞாபகப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வுக்குப் பயப்படுங்கள். (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
كُونُوا۟
இருங்கள்
قَوَّٰمِينَ
நிலைநின்றவர்களாக
لِلَّهِ
அல்லாஹ்வுக்காக
شُهَدَآءَ
சாட்சி கூறுபவர்களாக
بِٱلْقِسْطِۖ
நீதிக்கு
وَلَا يَجْرِمَنَّكُمْ
உங்களை தூண்ட வேண்டாம்
شَنَـَٔانُ
துவேஷம்
قَوْمٍ
ஒரு சமுதாயத்தின்
عَلَىٰٓ
மீது
أَلَّا تَعْدِلُوا۟ۚ
நீங்கள் நீதமாக நடக்காதிருக்க
ٱعْدِلُوا۟
நீதமாக இருங்கள்
هُوَ
அது
أَقْرَبُ
மிக நெருக்கமானது
لِلتَّقْوَىٰۖ
இறையச்சத்திற்கு
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிந்தவன்
بِمَا تَعْمَلُونَ
எதை/செய்கிறீர்கள்

Yaaa aiyuhal lazeena aamaanoo koonoo qawwaa meena lillaahi shuhadaaa'a bilqist, wa laa yajrimannakum shana aanu qawmin 'alaaa allaa ta'diloo; i'diloo; huwa aqrabu littaqwaa wattaqul laah; innal laaha khabeerum bimaa ta'maloon

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதமாக (உண்மை) சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (எவ்வளவு குரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிக நெருங்கியது. (எத்தகைய சந்தர்ப்பங்களிலும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer

وَعَدَ
வாக்களித்தான்
ٱللَّهُ ٱلَّذِينَ
அல்லாஹ்/எவர்களுக்கு
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தனர்
ٱلصَّٰلِحَٰتِۙ
நற்செயல்களை
لَهُم
அவர்களுக்கு
مَّغْفِرَةٌ
மன்னிப்பு
وَأَجْرٌ عَظِيمٌ
இன்னும் கூலி/மகத்தானது

Wa'adal laahul lazeena aamanoo wa 'amilus saalihaati lahum maghfiratunw wa ajrun 'azeem

எவர்கள், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார் களோ அவர்களுக்கு பாவமன்னிப்பையும், மகத்தான (நற்) கூலியையும் (தருவதாக) அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்ப்பித்தார்கள்
بِـَٔايَٰتِنَآ
நம் வசனங்களை
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
أَصْحَٰبُ
வாசிகள்
ٱلْجَحِيمِ
நரக

Wallazeena kafaroo wa kazzaboo bi Aayaatinaaa ulaaa'ika Ashaabul Jaheem

எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நரகவாசிகள்தான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் மாயிதா
القرآن الكريم:المائدة
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Ma'idah
ஸூரா:5
வசனம்:120
Total Words:-
Total Characters:12464
Number of Rukūʿs:16
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:112
Starting from verse:669