Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௬

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْكَعْبَيْنِۗ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْاۗ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰٓى اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَاۤءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَاۤىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَاۤءَ فَلَمْ تَجِدُوْا مَاۤءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ مِّنْهُ ۗمَا يُرِيْدُ اللّٰهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰكِنْ يُّرِيْدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ  ( المائدة: ٦ )

O you who believe!
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே
When you stand up
إِذَا قُمْتُمْ
நீங்கள் நின்றால்
for the prayer
إِلَى ٱلصَّلَوٰةِ
தொழுகைக்கு
then wash
فَٱغْسِلُوا۟
கழுகுங்கள்
your faces
وُجُوهَكُمْ
உங்கள் முகங்களை
and your hands
وَأَيْدِيَكُمْ
இன்னும் கைகளை/உங்கள்
till
إِلَى
வரை
the elbows
ٱلْمَرَافِقِ
முழங்கைகள்
and wipe
وَٱمْسَحُوا۟
இன்னும் தடவுங்கள்
your heads
بِرُءُوسِكُمْ
உங்கள் தலைகளில்
and your feet
وَأَرْجُلَكُمْ
இன்னும் உங்கள் கால்களை
till
إِلَى
வரை
the ankles
ٱلْكَعْبَيْنِۚ
இரு கணுக்கால்கள்
But if you are
وَإِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
(in) a state of ceremonial impurity
جُنُبًا
முழுக்காளிகளாக
then purify yourselves
فَٱطَّهَّرُوا۟ۚ
நன்கு சுத்தமாகுங்கள்
But if you are
وَإِن كُنتُم
இன்னும் நீங்கள் இருந்தால்
ill
مَّرْضَىٰٓ
நோயாளிகளாக
or
أَوْ
அல்லது
on a journey
عَلَىٰ سَفَرٍ
பயணத்தில்
or
أَوْ
அல்லது
has come
جَآءَ
வந்தார்
any one
أَحَدٌ
ஒருவர்
of you
مِّنكُم
உங்களில்
from
مِّنَ
இருந்து
the toilet
ٱلْغَآئِطِ
மலஜல பாதை
or
أَوْ
அல்லது
has (had) contact
لَٰمَسْتُمُ
உறவு கொண்டீர்கள்
(with) the women
ٱلنِّسَآءَ
பெண்களுடன்
and not you find
فَلَمْ تَجِدُوا۟
பெறவில்லை
water
مَآءً
தண்ணீரை
then do tayyammum
فَتَيَمَّمُوا۟
நாடுங்கள்
(with) earth
صَعِيدًا
மண்ணை
clean
طَيِّبًا
சுத்தமானது
then wipe
فَٱمْسَحُوا۟
இன்னும் தடவுங்கள்
your faces
بِوُجُوهِكُمْ
முகங்களை/உங்கள்
and your hands
وَأَيْدِيكُم
இன்னும் கைகளை/உங்கள்
with it
مِّنْهُۚ
அதில்
Does not intend
مَا يُرِيدُ
நாடமாட்டான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
to make
لِيَجْعَلَ
ஆக்குவதற்கு
for you
عَلَيْكُم
உங்கள் மீது
any difficulty
مِّنْ حَرَجٍ
சிரமத்தை
but
وَلَٰكِن
எனினும்
He intends
يُرِيدُ
நாடுகிறான்
to purify you
لِيُطَهِّرَكُمْ
உங்களைபரிசுத்தமாக்க
and to complete
وَلِيُتِمَّ
இன்னும் முழுமையாக்க
His Favor
نِعْمَتَهُۥ
தன் அருளை
upon you
عَلَيْكُمْ
உங்கள் மீது
so that you may (be) grateful
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Yaaa aiyuhal lazeena aamanoo izaa qumtum ilas Salaati faghsiloo wujoohakum wa Aidiyakum ilal maraafiqi wamsahoo biru'oosikum wa arjulakum ilal ka'bayn; wa in kuntum junuban fattahharoo; wain kuntum mardaaa aw'alaa safarin aw jaaa'a ahadum minkum minal ghaaa'iti aw laamastumunnisaaa'a falam tajidoo maaa'an fatayammamoo sa'eedan taiyiban famsahoo biwujoohikum wa aideekum minh; ma yureedul laahu liyaj'ala 'alaikum min harajinw wa laakidy yureedu liyutahhirakum wa liyutimma m'matahoo 'alaikum la'allakum tashkuroon (al-Māʾidah 5:6)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரையில் உங்கள் இரு பாதங்களையும் கழுவிக் கொள்ளுங்கள். அன்றி, (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை(த் தடவி) "மஸஹு" செய்து கொள்ளுங்கள். நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் (கை கால்களை மட்டும் கழுவினால் போதாது. உடல் முழுவதையும் கழுவி) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அன்றி, நீங்கள் நோயாளிகளாக இருந்தோ அல்லது பயணத்தில் இருந்தோ அல்லது உங்களில் எவரும் மலஜல பாதைக்குச் சென்று வந்திருந்தோ அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தோ (தொழுகையின் நேரம் வந்து உங்களைச் சுத்தம் செய்து கொள்வதற்கு வேண்டிய) தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் (தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது) சுத்தமான மண்ணை (உங்கள் கைகளால் தொட்டு அதனை)க் கொண்டு உங்கள் முகங்களையும், கைகளையும் துடைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கஷ்டத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும், அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகின்றான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!

English Sahih:

O you who have believed, when you rise to [perform] prayer, wash your faces and your forearms to the elbows and wipe over your heads and wash your feet to the ankles. And if you are in a state of janabah, then purify yourselves. But if you are ill or on a journey or one of you comes from the place of relieving himself or you have contacted women and do not find water, then seek clean earth and wipe over your faces and hands with it. Allah does not intend to make difficulty for you, but He intends to purify you and complete His favor upon you that you may be grateful. ([5] Al-Ma'idah : 6)

1 Jan Trust Foundation

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.