(அதற்கு இறைவன், அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) "அந்த இடம் நாற்பது வருடங்கள் வரையில் அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரையில்) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள். ஆகவே, இந்தப் பாவிகளான மக்களைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்!" என்று (மூஸாவுக்குக்) கூறினான்.
English Sahih:
[Allah] said, "Then indeed, it is forbidden to them for forty years [in which] they will wander throughout the land. So do not grieve over the defiantly disobedient people." ([5] Al-Ma'idah : 26)
1 Jan Trust Foundation
(அதற்கு அல்லாஹ்) “அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்” என்று கூறினான்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"நிச்சயமாக அது அவர்கள் மீது தடுக்கப்பட்டதாகும். நாற்பது ஆண்டுகள் (அவர்கள்) பூமியில் திக்கற்றலைவார்கள். ஆகவே, பாவிகளான சமுதாயத்தின் மீது கவலைப்படாதீர்!" என்று (மூஸாவுக்கு அல்லாஹ்) கூறினான்.