Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௮௯

لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِيْٓ اَيْمَانِكُمْ وَلٰكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَيْمَانَۚ فَكَفَّارَتُهٗٓ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِيْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِيْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِيْرُ رَقَبَةٍ ۗفَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ ۗذٰلِكَ كَفَّارَةُ اَيْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ ۗوَاحْفَظُوْٓا اَيْمَانَكُمْ ۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ   ( المائدة: ٨٩ )

Not will call you to account
لَا يُؤَاخِذُكُمُ
தண்டிக்கமாட்டான் / உங்களை
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
for the thoughtless utterances
بِٱللَّغْوِ
வீணானதற்காக
in your oaths
فِىٓ أَيْمَٰنِكُمْ
சத்தியங்களில்/உங்கள்
but He will call you to account
وَلَٰكِن يُؤَاخِذُكُم
எனினும்/உங்களைத் தண்டிப்பான்
for what
بِمَا
எதற்காக
you contracted
عَقَّدتُّمُ
உறுதிப்படுத்தினீர்கள்
(of) the oath
ٱلْأَيْمَٰنَۖ
சத்தியங்களை
So its expiation
فَكَفَّٰرَتُهُۥٓ
அதற்குப் பரிகாரம்
(is) feeding
إِطْعَامُ
உணவளிப்பது
(of) ten
عَشَرَةِ
பத்து
needy people
مَسَٰكِينَ
ஏழைகளுக்கு
of
مِنْ
இருந்து
average
أَوْسَطِ
நடுத்தரமானது
(of) what you feed
مَا تُطْعِمُونَ
எது/ உணவளிக்கிறீர்கள்
your families
أَهْلِيكُمْ
உங்கள் குடும்பத்திற்கு
or
أَوْ
அல்லது
clothing them
كِسْوَتُهُمْ
அவர்களுக்கு ஆடையளிப்பது
or
أَوْ
அல்லது
freeing
تَحْرِيرُ
விடுதலையிடுவது
a slave
رَقَبَةٍۖ
ஓர் அடிமை
But whoever
فَمَن
எவர்
(does) not find
لَّمْ يَجِدْ
பெறவில்லையெனில்
(that), then fasting
فَصِيَامُ
நோன்பிருத்தல்
(for) three
ثَلَٰثَةِ
மூன்று
days
أَيَّامٍۚ
நாட்களுக்கு
That
ذَٰلِكَ
இது
(is the) expiation
كَفَّٰرَةُ
பரிகாரம்
(of) your oaths
أَيْمَٰنِكُمْ
உங்கள் சத்தியங்களின்
when you have sworn
إِذَا حَلَفْتُمْۚ
நீங்கள் சத்தியம் செய்தால்
And guard
وَٱحْفَظُوٓا۟
காப்பாற்றுங்கள்
your oaths
أَيْمَٰنَكُمْۚ
உங்கள் சத்தியங்களை
Thus
كَذَٰلِكَ
இவ்வாறு
makes clear
يُبَيِّنُ
விவரிக்கிறான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
to you
لَكُمْ
உங்களுக்கு
His Verses
ءَايَٰتِهِۦ
தன் வசனங்களை
so that you may (be) grateful
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Laa yu'aakhizukumul laahu billaghwi feee aimaanikum wa laakiny ya'aakhizukum bimaa 'aqqattumul aimaana fakaf faaratuhooo it'aamu 'asharati masaakeena min awsati maa tut'imoona ahleekum aw kiswatuhum aw tahreeru raqabatin famallam yajid fa Siyaamu salaasati aiyaam; zaalika kaffaaratu aimaanikum izaa halaftum; wahfazooo aimaanakum; kazaalika yubaiyinul laahu lakum Aayaatihee la'allakum tashkuroon (al-Māʾidah 5:89)

Abdul Hameed Baqavi:

உங்களின் வீணான சத்தியங்களைக் கொண்டு அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிப்பதில்லை. எனினும், (யாதொன்றை) உறுதிப்படுத்த நீங்கள் செய்யும் சத்தியத்தைப் பற்றி (அதில் தவறு செய்தால்) உங்களைப் பிடிப்பான். (அதில் தவறு ஏற்பட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்குக் கொடுத்து வரும் உணவில் மத்திய தரமான உணவை பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்; அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். (பரிகாரமாகக் கொடுக்கக்கூடிய இவைகளில் எதனையும்) எவரும் பெற்றிருக்காவிட்டால் அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். (உங்கள் சத்தியத்தை நிறைவேற்ற முடியாவிட்டால்) நீங்கள் செய்த சத்தியத்திற்குரிய பரிகாரம் இதுதான். எனினும், நீங்கள் உங்கள் சத்தியங்களை (மிக எச்சரிக்கையுடன் பேணி)க் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக அவன் தன்னுடைய வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரி(த்து)க் (கூறு)கின்றான்.

English Sahih:

Allah will not impose blame upon you for what is meaningless in your oaths, but He will impose blame upon you for [breaking] what you intended of oaths. So its expiation is the feeding of ten needy people from the average of that which you feed your [own] families or clothing them or the freeing of a slave. But whoever cannot find [or afford it] – then a fast of three days [is required]. That is the expiation for oaths when you have sworn. But guard your oaths. Thus does Allah make clear to you His verses [i.e., revealed law] that you may be grateful. ([5] Al-Ma'idah : 89)

1 Jan Trust Foundation

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது| உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.