நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறி கேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
English Sahih:
O you who have believed, indeed, intoxicants, gambling, [sacrificing on] stone alters [to other than Allah], and divining arrows are but defilement from the work of Satan, so avoid it that you may be successful. ([5] Al-Ma'idah : 90)
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூது, சிலைகள், (ஜோசிய) அம்புகள் ஷைத்தானுடைய செயல்களில் உள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே, நீங்கள் வெற்றி பெறுவதற்காக இவற்றை விட்டு விலகுங்கள்.