மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் (ஷைத்தானாகிய) அவர்களுக்கு செவிசாய்த்து அதனை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் செய்யும் தீய செயல்களை இவர்களும் செய்வதற்காகவும் (இவ்வாறு இவர்களை அவர்கள் மயக்கி வந்தனர்.)
English Sahih:
And [it is] so the hearts of those who disbelieve in the Hereafter will incline toward it [i.e., deceptive speech] and that they will be satisfied with it and that they will commit that which they are committing. ([6] Al-An'am : 113)
1 Jan Trust Foundation
(ஷைத்தான்களின் அலங்காரமான பேச்சை) மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் செவிமடுப்பதற்காகவும் அதை திருப்தி கொள்வதற்காகவும் அவர்கள் செய்து வந்ததையே தொடர்ந்து செய்வதற்காகவும் (இவ்வாறு ஷைத்தான்கள் மயக்கினர்).
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மறுமையை நம்பாதவர்களுடைய உள்ளங்கள் அதன் பக்கம் செவிசாய்ப்பதற்காகவும், அதை அவர்கள் திருப்தி கொள்வதற்காகவும், அவர்கள் செய்(யும்) ப(லவமான)வற்றை செய்வதற்காகவும் (ஷைத்தான்கள் அவர்களை ஏமாற்றினர்).