Wa kazaalika ja'alnaa fee kulli qaryatin akaabira mujrimeehaa liyamkuroo feehaa wa maa yamkuroona illaa bi anfusihim wa maa yash'uroon (al-ʾAnʿām 6:123)
Abdul Hameed Baqavi:
அன்றி, இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் ஆங்காங்குள்ள பாவிகளை நாம் தலைவர்களாக்கி இருக்கின்றோம். அங்கு அவர்கள் விஷமம் (செய்ய சதி) செய்து கொண்டிருப்பார்கள். எனினும், அவர்கள் தங்களுக்கேயன்றி (மற்றெவருக்கும்) சதி செய்துவிட முடியாது. (இதனை) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
English Sahih:
And thus We have placed within every city the greatest of its criminals to conspire therein. But they conspire not except against themselves, and they perceive [it] not. ([6] Al-An'am : 123)
மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்வாறே எல்லா ஊரிலும் அதிலுள்ள பெரிய பாவிகளை அவற்றில் சதி செய்வதற்காக ஏற்படுத்தினோம். தங்களுக்கே தவிர (மற்றவர்களுக்கு) அவர்கள் சதி செய்யமாட்டார்கள். (இதை அவர்கள்) உணர மாட்டார்கள்.