(உங்களில்) சிலரை அவன் நேரான வழியில் செலுத்தியிருக்க மற்றோர் மீது வழிகேடே விதிக்கப்பட்டதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே தங்கள் தோழர்களாக எடுத்துக் கொண்டதுடன் தாங்கள் நிச்சயமாக நேரான வழியில் இருப்பதாகவும் எண்ணிக் கொண்டதுதான்.
English Sahih:
A group [of you] He guided, and a group deserved [to be in] error. Indeed, they [i.e., the latter] had taken the devils as allies instead of Allah while they thought that they were guided. ([7] Al-A'raf : 30)
1 Jan Trust Foundation
ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது; ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஒரு பிரிவை அவன் நேர்வழிப்படுத்தினான். (வேறு) ஒரு பிரிவு, அதன் மீது வழிகேடு உறுதியாகிவிட்டது. (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே தோழர்களாக எடுத்துக் கொண்டு, நிச்சயமாக தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என எண்ணுகின்றனர்.