அதற்கவர்கள் "எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந் தவைளை நாங்கள் புறக்கணித்துவிட்டு அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படிச் செய்யவா நீங்கள் நம்மிடம் வந்தீர்கள்? (நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம்.) மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் நீங்கள் நமக்கு அச்சமூட்டுவதை நம்மிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள்.
English Sahih:
They said, "Have you come to us that we should worship Allah alone and leave what our fathers have worshipped? Then bring us what you promise us, if you should be of the truthful." ([7] Al-A'raf : 70)
1 Jan Trust Foundation
அதற்கு அவர்கள் “ எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்” என்று கூறினார்கள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை நாங்கள் விட்டு விட்டு அல்லாஹ்(வை) அவன் ஒருவனை மட்டும் நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளர்களில் இருந்தால் நீர் நமக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக” என்று கூறினர்.