Skip to main content

ஸூரத்துல் ஜின்னு வசனம் ௨௩

اِلَّا بَلٰغًا مِّنَ اللّٰهِ وَرِسٰلٰتِهٖۗ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًاۗ  ( الجن: ٢٣ )

But (the) notification
إِلَّا بَلَٰغًا
தவிர/ எடுத்துரைப்பதற்கும்
from Allah
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
and His Messages"
وَرِسَٰلَٰتِهِۦۚ
அவனுடைய தூதுத்துவ செய்திகளுக்கும்
And whoever
وَمَن
எவர்
disobeys
يَعْصِ
மாறு செய்வாரோ
Allah
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
and His Messenger
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
then indeed
فَإِنَّ
நிச்சயமாக
for him
لَهُۥ
அவருக்கு
(is the) Fire
نَارَ
நெருப்புதான்
(of) Hell
جَهَنَّمَ
நரக
(they will) abide
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்
therein
فِيهَآ
அதில்
forever
أَبَدًا
எப்போதும்

Illaa balaagham minal laahi wa risaalaatih; wa many ya'sil laaha wa rasoolahoo fa inna lahoo naara jahannama khaalideena feehaaa abadaa (al-Jinn 72:23)

Abdul Hameed Baqavi:

ஆயினும், அல்லாஹ்விடமிருந்து (எனக்குக் கிடைத்த) அவனுடைய தூதை எடுத்துரைப்பதைத் தவிர (எனக்கு வேறு வழியில்லை.) ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான் (கூலியாகும்). அதில் அவர்கள் என்றென்றுமே தங்கி விடுவார்கள்.

English Sahih:

But [I have for you] only notification from Allah, and His messages." And whoever disobeys Allah and His Messenger – then indeed, for him is the fire of Hell; they will abide therein forever. ([72] Al-Jinn : 23)

1 Jan Trust Foundation

“அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்” என (நபியே!) நீர் கூறும்.