Skip to main content
bismillah

قُلْ
கூறுவீராக!
أُوحِىَ
வஹீ அறிவிக்கப்பட்டது
إِلَىَّ
எனக்கு
أَنَّهُ
நிச்சயமாக செய்தியாவது
ٱسْتَمَعَ
செவியுற்றனர்
نَفَرٌ
சில நபர்கள்
مِّنَ ٱلْجِنِّ
ஜின்களில்
فَقَالُوٓا۟
மேலும் அவர்கள் கூறினார்கள்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
سَمِعْنَا
செவியுற்றோம்
قُرْءَانًا
குர்ஆனை
عَجَبًا
அதிசயமான

Qul oohiya ilaiya annna hustama'a nafarum minal jinnni faqaalooo innaa sami'naa quraanan 'ajabaa

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியுற்று(த் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம்."

Tafseer

يَهْدِىٓ
அது வழிகாட்டுகிறது
إِلَى ٱلرُّشْدِ
நேர்வழிக்கு
فَـَٔامَنَّا بِهِۦۖ
ஆகவே, நாங்கள் நம்பிக்கை கொண்டோம்/அதை
وَلَن نُّشْرِكَ
இன்னும் நாங்கள் இணையாக்க மாட்டோம்
بِرَبِّنَآ
எங்கள் இறைவனுக்கு
أَحَدًا
ஒருவரையும்

Yahdeee ilar rushdi fa aamannaa bihee wa lan nushrika bi rabbinaaa ahadaa

"அது நேரான வழியை அறிவிக்கின்றது. ஆகவே, அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இனி) நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் இணையாக்க மாட்டோம்.

Tafseer

وَأَنَّهُۥ
இன்னும் நிச்சயமாக செய்தியாவது
تَعَٰلَىٰ
மிக உயர்ந்தது
جَدُّ
மதிப்பு
رَبِّنَا
எங்கள் இறைவனின்
مَا ٱتَّخَذَ
அவன் எடுத்துக் கொள்ளவில்லை
صَٰحِبَةً
மனைவியை(யும்)
وَلَا وَلَدًا
பிள்ளைகளையும்

Wa annahoo Ta'aalaa jaddu Rabbinaa mat takhaza saahibatanw wa la waladaa

நிச்சயமாக எங்கள் இறைவனுடைய மகத்துவம் மிக்க மேலானது. அவன் எவரையும் (தன்னுடைய) மனைவியாகவோ, மக்களாகவோ எடுத்துக் கொள்ளவில்லை" என்று கூறினார்கள்.

Tafseer

وَأَنَّهُۥ
இன்னும் நிச்சயமாக செய்தியாவது
كَانَ
இருந்தான்
يَقُولُ
கூறுபவனாக
سَفِيهُنَا
எங்களில் உள்ள மூடன்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
شَطَطًا
அநியாயமான விஷயத்தை

Wa annahoo kaana yaqoolu safeehunaa 'alal laahi shatataa

(பின்னும் அவர்கள் கூறியதாவது:) "நிச்சயமாக நம்மிடமுள்ள மடையன் அல்லாஹ்வின் மீது (அவனுடைய பரிசுத்தத் தன்மைக்குத்) தகாத விஷயங்களைக் கூறுகின்றவனாக இருந்தான்."

Tafseer

وَأَنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
ظَنَنَّآ
நம்பினோம்
أَن لَّن
சொல்ல மாட்டார்கள்
ٱلْإِنسُ
மனிதர்களும்
وَٱلْجِنُّ
ஜின்களும்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
كَذِبًا
பொய்

Wa annaa zanannaaa al lan taqoolal insu wal jinnu 'alal laahi kazibaa

மனிதர்களும், ஜின்களும் நிச்சயமாக அல்லாஹ் மீது பொய் கூறமாட்டார்களென்று மெய்யாகவே (இதுவரையில்) நாங்கள் எண்ணிக் கொண்டு இருந்தோம்.

Tafseer

وَأَنَّهُۥ
இன்னும் நிச்சயமாக செய்தியாவது
كَانَ
இருந்தார்(கள்)
رِجَالٌ
ஆண்கள் சிலர்
مِّنَ ٱلْإِنسِ
மனிதர்களில் உள்ள
يَعُوذُونَ
பாதுகாவல் தேடுபவர்களாக
بِرِجَالٍ
ஆண்கள் சிலரிடம்
مِّنَ ٱلْجِنِّ
ஜின்களில் உள்ள
فَزَادُوهُمْ
எனவே அவர்கள் அவர்களுக்கு அதிகப்படுத்தினர்
رَهَقًا
பயத்தை

Wa annahoo kaana rijaa lum minal insi ya'oozoona birijaalim minal jinni fazaa doohum rahaqaa

மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள பல ஆண்களிடம் மெய்யாகவே (தங்களை) பாதுகாக்கக் கோருகின்றனர். எனவே, மனிதர்கள் அந்த ஜின்களுக்கு கர்வத்தை அதிகரிக்கச் செய்துவிட்டனர்.

Tafseer

وَأَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
ظَنُّوا۟
எண்ணினர்
كَمَا ظَنَنتُمْ
நீங்கள் எண்ணுவது போன்றுதான்
أَن لَّن
அறவே எழுப்ப மாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
أَحَدًا
ஒருவரையும்

Wa annahum zannoo kamaa zanantum al lany yab'asal laahu ahadaa

நீங்கள் எண்ணுகிறபடியே அவர்களும் (இறந்த பின்னர்) அல்லாஹ், ஒருவரையும் (உயிர்கொடுத்து) எழுப்பமாட்டான்" என்று நிச்சயமாக எண்ணிக் கொண்டனர்.

Tafseer

وَأَنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
لَمَسْنَا
தேடினோம்
ٱلسَّمَآءَ
வானத்தை
فَوَجَدْنَٰهَا
அதை நாங்கள் கண்டோம்
مُلِئَتْ
நிரப்பப்பட்டிருப்பதாக
حَرَسًا
காவல்களாலும்
شَدِيدًا
கடுமையான
وَشُهُبًا
இன்னும் எரி நட்சத்திரங்களாலும்

Wa annaa lamasnas sa maaa'a fa wajadnaahaa muli'at harasan shadeedanw wa shuhubaa

நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தடவிப் பார்த்தோம். அது பலமான பாதுகாவலர்களாலும், எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்.

Tafseer

وَأَنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
كُنَّا
இருந்தோம்
نَقْعُدُ
உட்காருபவர்களாக
مِنْهَا
அதில்
مَقَٰعِدَ
பல இடங்களில்
لِلسَّمْعِۖ
ஒட்டுக்கேட்க
فَمَن
யார்
يَسْتَمِعِ
ஒட்டுக் கேட்பாரோ
ٱلْءَانَ
இப்போது
يَجِدْ لَهُۥ
தனக்கு காண்பார்
شِهَابًا
எரி நட்சத்திரத்தை
رَّصَدًا
எதிர்பார்த்திருக்கின்ற

Wa annaa kunnaa naq'udu minhaa maqaa'ida lis'sam'i famany yastami'il aana yajid lahoo shihaabar rasada

(முன்னர்) அங்கு (நடைபெறும் விஷயங்களைச்) செவியுறக் கூடிய பல இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம். இப்பொழுதோ, (அவைகளைச்) செவியுற எவனேனும் சென்றால், நெருப்பின் ஒரு கங்கு அவனை (அடிப்பதற்காக) எதிர்பார்த்திருப்பதை அவன் காண்பான்.

Tafseer

وَأَنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
لَا نَدْرِىٓ
அறியமாட்டோம்
أَشَرٌّ أُرِيدَ
தீமை ஏதும் நாடப்பட்டதா?
بِمَن فِى
பூமியில் உள்ளவர்களுக்கு
أَمْ أَرَادَ
அல்லது நாடினானா?
بِهِمْ
அவர்களுக்கு
رَبُّهُمْ
அவர்களின் இறைவன்
رَشَدًا
நேர்வழியை

Wa annaa laa nadreee asharrun ureeda biman fil ardi am araada bihim rabbuhum rashadaa

பூமியிலுள்ளவர்களுக்கு (இதனால்) தீங்கு விரும்பப் படுகின்றதோ, அல்லது அவர்களின் இறைவன் (இதனால்) அவர்களுக்கு நன்மையை நாடியிருக்கின்றானோ என்பதை நிச்சயமாக நாங்கள் அறியமாட்டோம்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் ஜின்னு
القرآن الكريم:الجن
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Jinn
ஸூரா:72
வசனம்:28
Total Words:285
Total Characters:870
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:40
Starting from verse:5447