Skip to main content

ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௪௧

۞ وَاعْلَمُوْٓا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَيْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَلِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَآ اَنْزَلْنَا عَلٰى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ   ( الأنفال: ٤١ )

And know
وَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
that what
أَنَّمَا
நிச்சயமாக எது
you obtain (as) spoils of war
غَنِمْتُم
வென்றீர்கள்
of anything
مِّن شَىْءٍ
ஒரு பொருள்
then that
فَأَنَّ
நிச்சயமாக
for Allah
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
(is) one fifth of it
خُمُسَهُۥ
அதில் ஐந்தில் ஒன்று
and for the Messenger
وَلِلرَّسُولِ
இன்னும் தூதருக்கு
and for the near relatives
وَلِذِى ٱلْقُرْبَىٰ
இன்னும் உறவினர்களுக்கு
and the orphans
وَٱلْيَتَٰمَىٰ
இன்னும் அநாதைகளுக்கு
and the needy
وَٱلْمَسَٰكِينِ
இன்னும் ஏழைகளுக்கு
and the wayfarer
وَٱبْنِ ٱلسَّبِيلِ
இன்னும் பயணிகளுக்கு
if you
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
believe
ءَامَنتُم
நம்பிக்கை கொண்டவர்களாக
in Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வை
and (in) what We sent down
وَمَآ أَنزَلْنَا
இன்னும் எதை இறக்கினோம்
to Our slave
عَلَىٰ عَبْدِنَا
நம் அடியார் மீது
(on the) day
يَوْمَ
நாளில்
(of) the criterion
ٱلْفُرْقَانِ
பிரித்தறிவித்த
(the) day
يَوْمَ
நாளில்
(when) met
ٱلْتَقَى
சந்தித்தார்(கள்)
the two forces
ٱلْجَمْعَانِۗ
இரு கூட்டங்கள், இரு படைகள்
And Allah
وَٱللَّهُ
நிச்சயமாகஅல்லாஹ்
(is) on
عَلَىٰ
மீது
every thing
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
All-Powerful
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Wa'lamooo annamaa ghanimtum min sha'in fa anna lillaahi khumusahoo wa lir Rasooli wa lizil qurba walyataamaa walmasaakeeni wabnis sabeeli in kuntum aamantum billaahi wa maaa anzalnaa 'ala 'abdinaa yawmal Furqaani yawmaltaqal jam'aan; wal laahu 'alaa kulli shai'in Qadeer (al-ʾAnfāl 8:41)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு போரில் கிடைத்த எந்தப் பொருளிலும் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், (அவருடைய) பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரித்தானது. உண்மையாகவே நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பதுடன், இரு படைகளும் சந்தித்து (முடிவான) தீர்ப்பளித்த (பத்ரு) நாளில் நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை அவன்தான் இறக்கி வைத்தான் என்பதையும் நீங்கள் நம்புபவர்களாக இருந்தால், உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.

English Sahih:

And know that anything you obtain of war booty – then indeed, for Allah is one fifth of it and for the Messenger and for [his] near relatives and the orphans, the needy, and the [stranded] traveler, if you have believed in Allah and in that which We sent down to Our Servant on the day of criterion [i.e., decisive encounter] – the day when the two armies met [at Badr]. And Allah, over all things, is competent. ([8] Al-Anfal : 41)

1 Jan Trust Foundation

(முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.