Skip to main content

ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௪௪

وَاِذْ يُرِيْكُمُوْهُمْ اِذِ الْتَقَيْتُمْ فِيْٓ اَعْيُنِكُمْ قَلِيْلًا وَّيُقَلِّلُكُمْ فِيْٓ اَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ۗوَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ࣖ   ( الأنفال: ٤٤ )

And when
وَإِذْ
போது
He showed them to you
يُرِيكُمُوهُمْ
காட்டுகிறான்/உங்களுக்கு அவர்களை
when
إِذِ
போது
you met
ٱلْتَقَيْتُمْ
நீங்கள் சந்தித்தீர்கள்
in your eyes
فِىٓ أَعْيُنِكُمْ
உங்கள் கண்களில்
(as) few
قَلِيلًا
குறைவாக
and He made you (appear) as few
وَيُقَلِّلُكُمْ
இன்னும் குறைவாக காட்டுகிறான்/உங்களை
in their eyes
فِىٓ أَعْيُنِهِمْ
அவர்களுடைய கண்களில்
that might accomplish
لِيَقْضِىَ
நிறைவேற்றுவதற்காக
Allah might accomplish
ٱللَّهُ
அல்லாஹ்
a matter
أَمْرًا
ஒரு காரியத்தை
(that) was
كَانَ
இருக்கின்றது
(already) destined
مَفْعُولًاۗ
முடிவு செய்யப்பட்டதாக
And to Allah
وَإِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கமே
return
تُرْجَعُ
திருப்பப்படும்
(all) the matters
ٱلْأُمُورُ
காரியங்கள்

Wa iz yureekumoohum izil taqaitum feee a'yunikum qaleelanw wa yuqallilukum feee a'yunihim liyaqdiyal laahu amran kaana maf'oolaa; wa ilal laahi turja'ul umoor (al-ʾAnfāl 8:44)

Abdul Hameed Baqavi:

அவர்களும் நீங்களும் சந்தித்துக்கொண்ட சமயத்தில், அவர்களுடைய தொகையை உங்கள் கண்களுக்குக் குறைத்தும், உங்களுடைய தொகையை அவர்களுடைய கண்களுக்குக் குறைத்தும் காண்பித்ததெல்லாம், அல்லாஹ் முடிவு செய்த காரியம் நடைபெற்று (அவர்களை அழித்து)த் தீருவதற்காகத்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் சென்று முடிவடைகின்றன.

English Sahih:

And [remember] when He showed them to you, when you met, as few in your eyes, and He made you [appear] as few in their eyes so that Allah might accomplish a matter already destined. And to Allah are [all] matters returned. ([8] Al-Anfal : 44)

1 Jan Trust Foundation

நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான்; இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் - இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன.